நீ அழகு… என்று ஹீரோயினிடம் வழிந்த இயக்குனர்? முதல் நாள் ஷுட்டிங்கிலேயே இப்படி!
உயிர், சிந்து சமவெளி போன்ற படங்களை இயக்கிய சாமிக்கு தமிழ்சினிமாவில் அவ்வளவு நல்ல பெயர் இல்லை. இதை அவரே ஒப்புக் கொள்வார் என்பதும் ஐயமில்லை. கங்காரு படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் அவரது இமேஜை அழி ரப்பர் கொண்டு அழித்தார்கள். கறை போயே போச்! எப்படி?
சாமியின் தற்போதைய படம்தான் கங்காரு. இந்த படத்தின் முன்னோட்டமும், பாடல்களும்தான் அதற்கு காரணம். பாசமலர், முள்ளும் மலரும், கிழக்கு சீமையிலே, பொற்காலம் வரிசையில்… என்று முந்தைய படங்களின் கிளிப்பிங்ஸ்களை திரையிட்டு அப்படியே கங்காரு காட்சிகளையும் திரையிட்டார்கள். காலம் உள்ளளவும் பேசப்படும் வரிசையில் அட… நம்ம சாமியின் ‘கங்காரு!’
‘ஒரு படம் எப்படி வருதுங்கறது வெறும் டைரக்டர் கையில மட்டும் இல்ல. தயாரிப்பாளர், ஹீரோ, டிஸ்ட்ரிபியூட்டர்ஸ்னு எல்லார் கையிலும்தான் இருக்கு. படம் ஓடுனா எல்லாரும் கொண்டாடுவாங்க. ஓடலேன்னா எல்லா பழியையும் டைரக்டர் தலையில போட்ருவாங்க. இந்த படத்தின் கதையை நான் சுரேஷ் காமாட்சியிடம் சொன்னேன். அதை அவர் அக்சப்ட் பண்ணியதால்தான் இந்த கதையை படமாக்குனேன். இல்லேன்னா இந்த கதை படமாக ஆகியிருக்காது’ என்று தன்னிலை விளக்கம் கொடுத்தார் சாமி.
நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்தவர்களில் முக்கியமானவர் தாணு. இவர்தான் இந்த படத்தை உலகம் முழுவதும் வெளியிட இருக்கிறார். கிட்டதட்ட அவரிடம் முறையிடாத குறையாக குமுறினார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி. ‘என் படத்தின் ஷுட்டிங் அவுட்டோர்ல நடந்துச்சு. ஒரு நாள் பேட்டா கொடுக்கலே என்பதற்காக லைட்மேன் சங்கத்தை சேர்ந்த ஒருவர், படப்பிடிப்பையே நிறுத்திட்டார். இத்தனைக்கும் அவர் ஒன்றும் பெப்ஸி தலைவரும் இல்லை. செயலாளரும் இல்லை. நான் தயாரிப்பாளர் சங்கம், இயக்குனர் சங்கம் இரண்டுக்கும் புகார் பண்ணினேன். ஆனால் யாராலும் அவரை தட்டிக் கேட்க முடியல. நூற்று ஐம்பது பேர் வேலை செய்யும் ஒரு அவுட்டோர் ஷுட்டிங்கை நிறுத்தினா தயாரிப்பாளருக்கு எவ்வளவு நஷ்டம் வரும்? இந்த அதிகாரத்தை அந்த தனி நபருக்கு கொடுத்தது யார்? இந்த பிரச்சனையை நான் சும்மாவிட மாட்டேன் என்றார் சுரேஷ் காமாட்சி.
அதெல்லாம் இருக்கட்டும்… இந்த படத்தில் உதவி இயக்குனராக வேலை பார்த்திருக்கிறார் கோடம்பாக்கம், ராமன் தேடிய சீதை உள்ளிட்ட சில படங்களை இயக்கிய ஜெகன். ஹீரோயின் அழகா இருந்தால்தான் நான் அந்த படத்தில் அசிஸ்டென்ட்டா வேலை செய்வேன்னு ஒரு கொள்கை வச்சிருந்தேன். இந்த படத்தின் ஹீரோயின் பிரியங்கா நல்ல அழகு. அதனால்தான் ஒப்புக்கிட்டேன் என்றார். பின்னாலேயே பேச வந்த பிரியங்காவும், என்னை அவர் முதன் முதலா ஷுட்டிங்ல பார்த்தப்பவே சொல்லிட்டார். பிரியங்கா … நீ ரொம்ப அழகா இருக்கே. உன்னை எனக்கு பிடிச்சுருக்குன்னு என்று கூற, ஒரே கைதட்டல்.
அட… இது வேறயா?