க்ரவுட் பண்டிங்கை ஆரம்பிச்சு வச்சதே பாரதியார்தான்! இயக்குனர் கரு.பழனியப்பன் தந்த சுவாரஸ்யமான தகவல்

இயக்குனர்கள் முத்துராமலிங்கன், ஜெய்லானி இணைந்து முயலும் மூவி ஃபண்டிங் நெட்வொர்க் சினிமா பற்றி அதிகம் சொல்ல தேவையில்லை. தேவையான அளவுக்கு நமது இணையத்தில் ஏற்கனவே தெரிவித்தாயிற்று. கால் கிணறு, அரைக்கிணறு, முக்கால் கிணறு தாண்டிய இவ்விருவரும், மேற்படி விஷயத்தில் முழு கிணறு தாண்டிய நாள் நேற்று! ‘படங்களுக்கு தேவையான ஃபண்ட் கிடைச்சுருச்சு. இனி ஷுட்டிங் போக வேண்டியதுதான்’ என்கிற சந்தோஷத்தை பிரஸ்சோடு பகிர்ந்து கொண்டார்கள். சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்தவர்களில் ஒருவர் இயக்குனர் கரு. பழனியப்பன். மற்றொருவர் ‘அவள் பெயர் தமிழரசி’ பட இயக்குனர் மீரா கதிரவன்.

வழக்கம் போலவே கரு.பழனியப்பனின் பேச்சில் அவையடக்கத்தை தாண்டிய உள்ளடக்கமும், அழகும், கருத்தும் நிறைந்திருக்க ஆஹவென்றானது பிரஸ்மீட்! முதன் முதலில் கிரவுட் ஃபண்டிங்கை ஆரம்பித்து வைத்தவர் என்று அவர் குறிப்பிட்டது யாரோ ஒரு ஆங்கிலேயரையோ, கன்னட தெலுங்கு ஆசாமியையோ அல்ல. நம்ம பாரதியாரை. இனி கரு. பழனியப்பனின் சொல்லாடலிலேயே அந்த விஷயத்தை அறிவதுதான் உத்தமம்.

‘க்ரவுட் ஃபண்டிங் முறையை முதன் முதல்ல ஆரம்பிச்சு வச்சவர் பாரதியார்தான். 1920 ல் அவர் தன் நண்பர்களுக்கு ஒரு கடிதம் எழுதினார். நான் ஒரு புத்தகம் கொண்டு வரப்போறேன். அதுக்கு 20 ஆயிரம் ரூபாய் தேவைப்படுது. என்னோட நண்பர்கள் ஆளுக்கு 100 ரூபா கொடுத்து உதவுனீங்கன்னா அவங்களுக்கு நான் அதை வட்டியோட திருப்பி கொடுத்துருவேன் என்று குறிப்பிட்டிருக்கிறார். காலணா, அரையணா வட்டிக்கு கடன் கொடுத்துட்டு இருந்த காலத்திலேயே இரண்டு பைசா வட்டி தர்றேன் என்று அதில் குறிப்பிட்டிருக்கிறார் பாரதியார்’.

இப்படியொரு அரிய தகவலை இத்தனை ஆண்டு கால பொதுக்கூட்ட மற்றும பிரஸ்மீட் காலத்தில் கூட கேள்விப்படாத பிரஸ் தோழர்கள் பூத்த வாய் பூத்தபடி அமர்ந்திருக்க, அதற்கப்புறம் கலகலப்பாக்கினார் அரங்கத்தை. ‘முத்துராமலிங்கன் அடிப்படையில் ரொம்ப கோபக்காரர். இந்த சமுதாயத்தில் எல்லாத்தை பற்றியும் கோபப்படுகிற ஆள். எங்கே கோபம் இருக்கோ, அங்கே நேர்மை இருக்குன்னு நம்புறவன் நான். அவரும் அவரது நண்பர் ஜெய்லானியும் இந்த விஷயத்தை கையில் எடுத்திருக்காங்க. யாரோ கொடுக்கிறாங்க. இவங்க செய்யுறாங்க. இதில் வேடிக்கை பார்க்கிறவங்களுக்கு என்ன வந்திச்சு? நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர். நிதி குறைந்தவர் காசுகள் தாரீர். அதுவும் இல்லாதவங்க எதுவும் விமர்சிக்காமல் அமைதியா இருந்தா போதும்’ என்றார்.

கரு பழனியப்பன் சொல்ற இந்த பாலிஸியை ஒவ்வொருத்தரும் கடை பிடிச்சா பாராளுமன்றத்தில் கூட அமளியிருக்காது. கோ அஹெட் கிரவுட் ‘பண்டி(ங்)ட்ஸ்…’

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
ஒரு பிரச்சனையே முடியல… அதுக்குள்ள இன்னொன்று?

தனது ஆபாசப்படம் இணையதளத்தில் வெளியான நிமிடத்திலிருந்தே செல்போனை சுவிட்ச் ஆஃப் பண்ணிவிட்டு அமைதியாகிவிட்டார் அந்த நடிகை. அவர் மீது அன்பு கொண்ட பல இயக்குனர்களும், நடிகர்களும் சம்பந்தப்பட்ட...

Close