இயக்குனர் சங்கத்திற்காக கயல் ஷோ! -பிரபுசாலமன் ஏற்பாடு

கயல் திரைக்கு வந்து சில தினங்களே ஆகியிருக்கிறது. அதற்குள் இந்தோனேஷிய பகுதியில் மீண்டும் நிலநடுக்கம். அண்டை நாடுகள் பலவற்றிற்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தன்னிச்சையாக நடந்ததுதான் என்றாலும், சுனாமியின் சீற்றத்தை விலாவாரியாக காட்டிய படம் என்றால் அது கயல்தான். இந்த நேரத்தில் சுனாமி அறிவிப்பு வந்தாலும் வந்தது. பலரும் ‘கயல்’ பற்றியே பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

கன்னியாக்குமரியில் அமைந்திருக்கும் திருவள்ளூவர் சிலையின் உயரத்தை தாண்டியது அலைகள் என்ற பழைய புகைப்பட ஆதாரத்தை மீண்டும் உயிர்ப்பித்து விஷுவல் வடிவத்தில் காண்பித்து ரசிகர்களை அலற விட்டிருந்தார் இயக்குனர் பிரபு சாலமன். படம் குறித்த ஆர்வத்தை மேலும் தூண்டுவது போல பத்திரிகை விமர்சனங்கள் அமைய, ‘எங்களுக்கும் படம் போட்டுக் காட்டுங்க’ என்றார்களாம் இயக்குனர் சங்கத்தை சேர்ந்த பல்வேறு இயக்குனர்கள்.

இதையடுத்து சென்னையில் நாளை ஸ்பெஷலாக படம் திரையிடப்படுகிறது. இயக்குனர் சங்கத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான உறுப்பினர்களுக்காக இலவச ஷோவை ஏற்பாடு செய்திருக்கிறார் பிரபு சாலமன்.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
மருத்துவ விஞ்ஞானி பாண்டியராஜன் ?

மாங்காடு அம்மன் மூவீஸ் பட நிறுவனம் சார்பாக கணபதி தயாரிக்கும் படம் “ஆய்வுக்கூடம்” புதுமுகம் கணபதி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். புதுமுகம் சத்யஸ்ரீ கதாநாயகியாக அறிமுகமாகிறார். படத்தின்...

Close