டைவர்ஸ்! இரண்டாவது மனைவி ராக சுதாவையும் பிரிந்தார் ரஞ்சித்?
‘சிந்து நதிப்பூ’ படத்தில் ஹீரோவாக அறிமுகம் ஆனவர் ரஞ்சித்! அதற்கப்புறம் எத்தனையோ படங்களில் நடித்தாலும், ‘பசுபதி ராசக்காபாளையம்’ படத்தை தவிர அவர் பெயரை உருப்படியாக சொல்லும் படம் ஒன்றுமேயில்லை. இருந்தாலும் ஹீரோவாச்சே? பிரபல நடிகை ப்ரியா ராமன் அவரை லவ் பண்ணினார். கருத்தொருமித்த காதல் கல்யாணத்திலும் முடிந்தது. சில வருடங்கள்தான்… அதற்கப்புறம் யார் மீது தவறோ? ஜென்ட்டிலாக டைவர்ஸ் அப்ளை பண்ணி விவாகரத்தும் பெற்றுவிட்டார்கள்.
அதற்கப்புறம் யாருமே எதிர்பாராத விதத்தில் ரஞ்சித்தின் வலையில் விழுந்தார் நடிகை ராகசுதா. தானுண்டு… தன் பஜனையுண்டு என்று நித்யானந்தா ஆசிரமத்திலிருந்தவர் எப்படியோ பேஸ்புக் மூலம் நட்பானார் ரஞ்சித்திடம். அந்த நட்பு மெல்ல மெல்ல வீங்கி காதலாகிவிட்டது. ஆன்மீகத்திலிருந்து விலகிய ராகசுதா இல்லற வாழ்வில் அடியெடுத்து வைத்தார். ஒரு சுபயோக சுபதினத்தில் மாலை மாற்றிக் கொண்டார்கள் இருவரும்.
இப்போது கிடைத்திருக்கும் தகவல், அவ்வளவு நல்லதாக இல்லை. திருமணம் ஆன ஒன்றரை மாதத்திற்குள்ளாகவே ரஞ்சித்தின் நடப்புக் கணக்கில் ஆயிரம் தப்பு கண்டு பிடித்தாராம் ராகசுதா. இவரும் அவரும் முறைத்துக் கொண்டு நிற்க, நன்றாக நடந்த திருமணம் நாராசத்தில் முடிந்தது. நான் கோர்ட்டுக்கு போறேன் என்று கிளம்பினாராம் ராகசுதா. போனா போ… என்றாராம் ரஞ்சித். பத்து வருஷமானாலும் சிலருக்கு தீர்ப்பு வருவதில்லை. சிலருக்கு பத்தாம் மாசத்திலேயே வந்து விடுகிறது. அந்த விஷயத்தில் இந்த தம்பதி ரொம்பவே ஸ்பீடு.
கடந்த வாரம் இருவருக்கும் விவாகரத்து கிடைத்ததாக தகவல்கள் பரபரக்கிறது. இருவரில் யார் நிம்மதியாக இருக்கிறார்களோ? அவர் அடுத்த பந்திக்கு இலை போட தயாராகலாம்!