இசைய தளபதியா? பட்டமே வேணாம்… அலறும் விஜய் ஆன்ட்டனி!
நன்றாகவே தேறிவிட்டார் விஜய் ஆன்ட்டனி. ‘இந்த படத்திலேயே உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன?’ என்ற கேள்விக்கு ‘இந்த படத்திலேயே எனக்கு பிடிச்சது ஹீரோயினும் ஒரு சின்ன கேரக்டரில் நடிச்சுருக்கும் அஸ்மிதாவும்தான்’ என்றார். சலீம் பட பிரஸ்மீட்டில்தான் இத்தகைய கூத்து. அடிப்படையில் மனைவி தாஸனான அவருக்குள் இப்படியொரு நகைச்சுவை உணர்வா? என்று திடுக்கிட்ட அடுத்த வினாடியே சுதாரித்துக் கொண்டார் அவர். ‘எல்லாரும் கெமிஸ்ட்ரி கெமிஸ்ட்ரின்னு சொல்றாங்க. ஆனால் எனக்கு அவங்க கூட கெமிஸ்ட்ரியெல்லாம் ஏற்படல. ஏன்னா நான் அந்த விஷயத்துல இன்னும் ட்ரெய்னிங் ஆகல’ என்றார் லேசாக வெட்கப்பட்டபடியே.
‘நான்’ படத்தை தொடர்ந்து இந்த படத்திலும் அவர் இஸ்லாமியராகதான் நடிக்கிறார். படத்தில் வரும் டைட்டில் பாடல் முழுசாக உருது மொழியில் எழுதப்பட்டிருக்கிறது. அந்த ட்யூன் அப்படியே நம்மை ட்வைன் உலகத்திற்கு கொண்டு செல்ல, விஜய் ஆன்ட்டனிக்கும் அதே உணர்வுதானாம். ‘அந்த ஒரு பாடலுக்கு சப் டைட்டில் போட்டு யூ ட்யூப்பில் வெளியிடலாம்னு இருக்கேன்’ என்றார். இந்த படத்திலும் வெடிகுண்டு, துப்பாக்கி, இஸ்லாம் என்று காட்சிகள் அதையே சுற்றி சுற்றி வர , ‘இது என்ன மத தீவிரவாதம் தொடர்பான படமா?’ என்று கேள்வி எழுப்பப்பட்டது.
ஜுலை 25 ந் தேதி படத்தை ரிலீஸ் பண்ணிடுவோம். படத்தில் சஸ்பென்ஸ்னு பார்த்தா அதுதான். அதனால் இப்பவே கேட்காதீங்க என்று கத்தரி போட்ட விஜய் ஆன்ட்டனியை சுற்றியிருக்கும் பாடலாசிரியர்கள் ஷாக் ஆகிற மாதிரி ஒரு செய்தியை சொல்லிவிட்டு பிரஸ்மீட்டை நிறைவு செய்தார் வி.ஆ. என்னவாம்?
இசையமைக்கறதை விட, நடிக்கறது ஈஸியா இருக்கு. அதனால் தொடர்ந்து நடிப்புதான். எப்பவாவதுதான் இனிமேல் இசை!
நாகரீக மறுப்பு- காலையில் நடந்த சலீம் இசைவெளியீட்டு விழாவில் விஜய் ஆன்ட்டனிக்கு இசைய தளபதி என்ற பட்டத்தை அளித்தார் நடிகர் பார்த்திபன். பத்திரிகையாளர் சந்திப்பில் இதை குறிப்பிட்ட விஜய் ஆன்ட்டனி எனக்கு பட்டமெல்லாம் வேண்டாம். பெயர் சொல்லி கூப்பிட்டா போதும் என்றார் அடக்கமாக!
வரவேற்கிறோம்ணே…