பாகுபலி மாதிரி எடுத்துருக்கோம்னு எழுதாதீங்க… அது வேற இது வேற! – புலி படத்திற்கு சிம்புதேவன் சப்பைக்கட்டு

அபீஷியலான ஃபர்ஸ்ட் லுக், அநியாயத்துக்கு களவாடப்பட்டு தவிர்க்க முடியாமல் செகன்ட் லுக் ஆகிப் போனது. இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தது புலி பட டீம்! பின்னால் வைத்திருந்த வினைல் போர்டில் வைக்கப்பட்டிருந்த அத்தனை ஸ்டில்களும் கண்டிப்பாக செகன்ட் லுக் அன்றி வேறில்லை. விஜய், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி, சுதீப் இவர்கள் யாருமில்லாமல் பிரஸ்சை சந்தித்தது குழு! (முக்கியமான பாதி பேர் இல்லேன்னா அது என்னய்யா குழு?) இருந்தாலும் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் சமாளித்தார் அந்த வெற்றிடத்தை.

‘ஆந்திராவுல நல்ல நல்ல மெலடிஸ் போடுவேன். தமிழ்நாட்ல நம்மகிட்ட அப்படியெல்லாம் கேட்க மாட்டேங்குறாங்களேன்னு ஏக்கமே வரும். அதை இந்த படத்தில் தீர்த்திருக்கார் டைரக்டர் சிம்புதேவன். ஒரு மெலடியை விஜய் சாரும், ஸ்ருதியும் பாடியிருக்காங்க. அவ்வளவு சூப்பர்ப்….’ என்றார் சந்தோஷமாக.

‘இது டைம் மிஷின் கதையா?’ என்று பாய்ந்து வந்த கேள்வியை ஒருவித பதற்றத்துடன் சந்தித்தார் சிம்புதேவன். ‘இப்பவே கதையை கேட்டீங்கன்னா எப்படி?’ என்றார். ‘இது பாகுபலி படம் மாதிரி முழு சரித்திரக்கதையா?’ என்ற கேள்விக்கும் அதே பதில். ஆனால் இந்த சந்தர்ப்பத்தில் ஒரு முக்கியமான விளக்கத்தையும் கொடுத்தார். ‘பல பேரு இது பாகுபலி மாதிரியான படம்னு எழுதுறாங்க. நிச்சயமா இது வேற. அது வேற. இந்த கதைக்கு என்ன தேவையோ? அதை முழுமையா திரையில காட்டியிருக்கோம். மற்றபடி இதையும் அதையும் கம்பேர் பண்ணி பேசறது சரியா இருக்காது’ என்றார்.

முன்னதாக பேசிய படத்தின் தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார், சுதீப்பிடம் சிம்புதேவன் கதை சொல்லப் போன அனுபவத்தை போகிற போக்கில் அவிழ்த்துவிட்டார். இந்த கதையை சொல்வதற்கு முன்னாடி ‘நீங்க இதுல வில்லனா நடிக்கணும்’னு சொன்னதும் சுதீப் சார் கொஞ்சம் கோபப்பட்டார். அப்புறம் முழுசா கதையை கேட்டு முடிச்சதும் அப்படியே பிரமிச்சுட்டார். உடனே கால்ஷீட்டும் கொடுத்தார். இவ்வாறு கூறிய பிடிஎஸ். தொடர்ந்து பேசியதில் ஒன்று புரிந்தது. விஜய் பட வரலாற்றிலேயே இது வேறு மாதிரியிருக்கும் என்பதுதான் அது!

‘படு கமர்ஷியலா வந்திருக்கு படம்’ என்று பி.டி.எஸ் சொன்னதிலும் ஒரு ஸ்பெஷல் காரணம் இருக்குமோ?

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
மறுபடியும் சரக்கு? காரணம் இருக்கு அதுக்கு! ஆர்யா கூட்டணி அதிரடி பதில்…

டாஸ்மாக்கின் பிராண்ட் அம்பாசிடர் ஆகாமல் விட மாட்டார் போலிருக்கிறது டைரக்டர் ராஜேஷ் எம். இவர் இயக்கத்தில் விரைவில் வெளிவர இருக்கும் ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ படத்திலும்...

Close