நடந்தது இதுதான்! டோண்ட் மேக் டென்ஷன்!
சற்று தாமதமானாலும் இவிய்ங்க அட்டகாசம் பொறுக்க முடியாமல்தான் இந்த நியூஸ். (மொதல்ல இதெல்லாம் ஒரு நியூசா? என்று மற்றவர்கள் குமுறினாலும்…)
சமூக வலைதளங்களில் ஒரு விஷயத்தை கொண்டாடிக் கொண்டிருக்கிறர்கள் விஜய் ரசிகர்கள். எதற்காக? விஜய்யின் மகன் சஞ்சய் 10 ம் வகுப்பு பொதுத் தேர்வில் 500 க்கு 496 மார்க் வாங்கியிருக்கிறாராம். அதற்காக, புலிக்கு பிறந்தது பூனையாகுமா? என்றும், அதாண்டா எங்க தளபதி… என்றும் அப்பா படிக்கலேன்னா என்ன? அவரு புள்ள அவருக்கும் சேர்த்து படிப்பாருல்ல என்றும் ஏகப்பட்ட கமெண்ட்ஸ். ஷேர்ஸ்.
சற்றே யோசிக்கிற அப்பாவிகள் மட்டும், ‘இது நிஜமான்னு யாராவது விசாரிச்சு சொல்லுங்களேன். இல்லேன்னா இன்னைக்கு சாயங்காலத்துக்குள்ள என்னோட குடி முழுகிடும்’ என்று பதறுகிறார்கள். இப்படி அம்மாவின் தீர்ப்பு வந்த தினத்தன்று சென்னை இருந்ததை விட செம டென்ஷனில் இருக்கும் பலருக்காகவும், எதை சொன்னாலும் கண்மூடித்தனமாக நம்பி காது மூடித்தனமாக அறுத்துத்தள்ளும் வெறியர்களுக்காவும்தான் இந்த செய்தி.
இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால்…. நீங்கள் குறிப்பிடும் திருவாளர் விஜய்யின் மகன் சஞ்சய் தற்போது 9 ம் வகுப்புதான் படித்து வருகிறார். நீங்கள் வியக்கும் அத்தனை விஷயங்களும் ஒருவேளை அடுத்த வருடம் நடக்கலாம். அல்லது நடக்காமலும் போகலாம். உங்களை கெஞ்சி கேட்கிறோம். இப்போதைக்கு டோன்ட் மேக் டென்ஷன்!