கசமுசா பண்ண விடமாட்டேன்! ஜி.வி.பிரகாஷை தடுப்பது யார்?
முனிஸ்வரனுக்காக கெடா வெட்டி முருகேசன் ஏப்பம் விட்ட கதையா ஆகிடும் போலிருக்கு பொங்கல் ரிலீஸ்! அஜீத்தின் ‘என்னை அறிந்தால்’ வராது என்றவுடனேயே குட்டி குட்டி படங்கள் நான் வர்றேன்… நீ வர்றேன்… என்று அடித்து பிடித்துக் கொண்டு கிளம்பி விட்டன. இதில் ‘அப்புறம் பார்த்துக்கலாம்’ என்று சோம்பேறியாக இருந்த ‘டார்லிங்’ களத்தில் குதித்ததுதான் விசேஷம். பிரபல இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடித்த ரெண்டாவது படம் இது. முதல் படம் ‘பென்சில்’ இன்னும் முடியவேயில்லை.
அவசரம் அவசரமாக டார்லிங்கை முடித்து தியேட்டர் புக் பண்ண ஆரம்பித்துவிட்டார் அப்படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா. தற்கொலை செய்து கொண்ட இளம் பெண்ணின் வீட்டுக்கு தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்துடன் போய் சேரும் இரண்டு ஜோடிகள், அந்த ஆவியிடம் படுகிற பாடுதான் கதை. சாவதற்கு முன்பு ரொமான்ஸ் பண்ணிவிட்டு சாவோமே என்று இவர்கள் நினைக்க, ரொமான்ஸ் பண்ண விடுவேனா என்று அந்த ஆவி தடுக்க ஒரே கசாமுசா.
எவ்வ்வ்வ்வ்வ்வளவு விதமான பேய்கள்டா…?