அருவி திருட்டுக் கதையா? ரொம்ப தப்பா பேசுறீங்க!

கடந்த இரண்டு நாட்களாகவே சேறு சகதியுமாக வாரியிறைத்துக் கொண்டிருக்கிறார்கள் சோஷியல் மீடியாவில். அத்தனையும் அருவி மீது. பேரிறைச்சலுடனும் பெரு மகிழ்வோடும் குதித்தோடும்அருவி முன் இதெல்லாம் எடுபடப் போவதில்லை என்பது வேறு. ஆனால் அவர்கள் சொல்லும் அந்த அஸ்மாவில், அருவியின் உருவல் என்ன? ஒரு ஸ்பூன் கூட இல்லை.

இந்த நம்பிக்கையும் சமாதானமும் நமக்கு வந்த அதே நேரத்தில் படத்தில் இயக்குனராக நடித்திருக்கும் கவிதா பாரதிக்கு கோபமே வந்திருக்கிறது. அதிலென்ன தவறு?

இதோ- கவிதா பாரதியின் விளக்கம்-

அஸ்மாவை அருவியாக்கி ஆத்ம திருப்தியடைபவர்கள் யார்… ஏன்?

இந்தப் பெயரை அரபியிலும் எனக்கு வாசிக்கமுடியும் என்பது இங்கிப்போது பெருமையா, துயரா தெரியவில்லை. أ = அ, س=ஸ், ما= ம, ء= ஆ.

‘நீல்’ என்பது நீலம். மட்டுமல்ல, தெலுங்கில், நீலு என்றால் நீர். எகிப்திய நதி ‘நைல்’, எனவே நமக்கு சொக்கார (அல்லது சொந்தக்கார) உறவு ஆகிறது அல்லவா? திராவிடர்கள் எகிப்திலிருந்து வந்தவர்கள் என்னும் ஒரு ‘தியரி’யும் உண்டு இங்கே. கிளியோபாட்ரா மாமை நிறத்தினள் என்பது இன்னொரு சான்று. அவள் நமக்கு ஆச்சி.

‘அரவாடு’ என்பது தமிழர்களைக் குறிக்கலாம். அது அவர்கள் ‘நாகர்கள்’ என்னும் பொருள் தருகிறது. திராவிடர்கள் ஆனால் நாகர்களா? எகிப்திய அரசர்கள் சிலரது மணிமுடிகூட நாகப்பட வடிவிலிருக்கிறதே?

கதைக்கு வருவோம்.

“அஸ்மா” என்றொரு திரைப்படம் வந்திருக்கிறது. எகிப்தியப்படம். நாயகியின் பெயர்தான் அஸ்மா. அவளுக்கு AIDS இருக்கிறது. அதனால் அவளது பித்தப்பை பாதிக்கப்பட்டு இருக்கிறது. அறுவைச்சிகிச்சையால் அதைச் சரிசெய்ய முடியும். ஆனால் மருத்துவர்கள் தவிர்க்கிறார்கள். ஒரு தொலைக்காட்சி அவளுக்கு உதவ முன்வருகிறது. அதாவது அவளது பிரச்சனையை வெளிப்படுத்தினால், அப்புறம் மருத்துவர்கள் தப்பியோட முடியாது என்கிறது.

அஸ்மாவுக்கு ஹபீபா என்றொரு பதின்பருவத்து மகளும் ஹோஸ்னி என்றொரு அப்பாவும் இருக்கிறார்கள். அப்பாவுக்குத் தெரியும், அஸ்மாவுக்கு அந்த நோய் எப்படி வந்தது என்று.

அஸ்மாவின் கணவன் தேசநலனுக்காக ராணுவத்தில் இருந்தபோது அவனுக்கு அது வந்தது. அவன் அதுகாரணம் அஸ்மாவோடு கலவிகொள்ள மறுத்தபோதும், ஒரு சந்ததிக்காக, அஸ்மா வற்புறுத்தியதால் கலவி கொள்கிறான். அப்படி, ஆனால் ஆரோக்கியமாக, பிறந்தவள்தான் ஹபீபா. தாத்தா எடுத்துச்சொல்ல இதை அறிய வருகிறாள் பேர்த்தி.

தொலைக்காட்சி சேனலுக்கு ஃபோன் போடுகிறாள் மகள். உங்கள் நேரலையில் இருப்பவள் என் தாய். அவள் ஒரு ‘ஹீரோ’ என்கிறாள். அஸ்மாவுக்கு, இனி தான் தன் முகத்தை வெளிப்படுத்தினாலும் பாதகமில்லை என்று தோன்றுகிறது.

இவ்வளவுதான் கதை.

அப்போ, துப்பாக்கி மிரட்டல் எல்லாம் இல்லையா?

ஒரு ஷாட்கூட, அதன் கோணம்கூட இயைந்துவரவில்லை.

அப்புறம் எப்படி “அருவி” அதன் காப்பி என்கிறார்கள்?

எல்லாம் ‘கிளியோபாட்ரா’ நம் ஆச்சி என்பது போலத்தான். வேலைக்காரியை ‘பாப்பாத்தி’ என்று பெயரிட்டுவிட்டார்களே என்று ‘அவாள்’கள் காண்டானாலும் புரிந்துகொள்ள முடியும். இரக்கமும் படலாம். ஆனால் திராவிட ‘மாமை’க் கிருஷ்ணாதிகள் இதனை நகல் என்பது…

எனக்குப் புரியவில்லை. உங்களுக்கு?

நம் நைல்நதி தேசத்து இந்தப் படம் Youtube-இல் கிடைக்கிறது.

இவ்வாறு கூறியிருக்கிறார் கவிதாபாரதி.

2 Comments
  1. Rajan says

    If you would have said people can think alike or it’s an inspiration, we can appreciate you. Instead you are criticizing the people by caste or others shows that you are not an artist. It’s not your fault, our system and politicians corrupted the minds like you.

  2. பிசாசு குட்டி says

    காப்பி இல்லை உண்மைதான்ஒ அதே சமயத்தில் ஒத்த சிந்தனையும் இருக்கும் தான்…. என் கனவில் கண்டது அதை ஒரு கதையாய் வடிவமைத்து நெஞ்சில் சுமந்தது… டார்லிங் 2 என்ற பெயரில் கண்டபோது (நிறைய மாறுதல்களோடு) எனக்கு அப்படித்தான் தோன்றியது.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
புத்தாண்டை AstroVed உடன் கொண்டாடி வாழ்வில் வளம் பெறுங்கள்!

இந்தப் புத்தாண்டில், வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற, ISO தரச் சான்று பெற்ற AstroVed இறைவனின் அருள் வேண்டி 3 தின சிறப்பு ஹோமங்கள் செய்து,...

Close