அவ்ளோதான் தர முடியும்! விஜய் சேதுபதி கறார்
கொஞ்சம் மடங்குனா போதும். முதுகை டீ ஸ்டேன்ட் ஆக்கிருவாங்க என்பதை சற்று லேட்டாகவே புரிந்து கொண்டிருக்கிறார் விஜய் சேதுபதி. டாப் ஹீரோயினை ஹீரோயினா தந்திருக்கேன். இன்னும் கொஞ்சம் டேட்ஸ்சை சேர்த்து சேர்த்து கொடுங்க பாஸ்… என்று வற்புறுத்தி வற்புறுத்தியே நிறைய நாட்கள் கால்ஷீட் வாங்கிவிட்டார்களாம் விஜய் சேதுபதியிடம். எந்த படத்துக்காகன்னு தெரியுதா? நயன்தாராவுடன் இவர் ஜோடியாக நடித்துக் கொண்டிருக்கும் நானும் ரவுடிதான் படத்திற்குதான்.
போடா போடி படத்திற்கு பிறகு விக்னேஷ் சிவன் இயக்கி வரும் இந்த படத்திற்காக இதுவரை 56 நாட்கள் நடித்துக் கொடுத்திருக்கிறாராம் விஜய் சேதுபதி. அவ்வளவு தேதிகள் கொடுத்தும் இன்னும் கொடுங்க என்கிறார்களாம். இத்தனைக்கும் சம்பளத்தையும் அவர் வழக்கமாக வாங்குவதை விட குறைத்துதான் வாங்கியிருக்கிறார். தனுஷ் தயாரிப்பு, நயன்தாரா ஹீரோயின் என்பதால் இந்த சலுகை.
பொறுத்து பொறுத்து பார்த்த விஜய் சேதுபதி, இனிமே தேதிகள் கொடுக்க முடியாது. நான் இந்த மாதம் 15 ந் தேதியில் இருந்து சூது கவ்வும் இயக்குனர் நலன் குமாரசாமி படத்தில் நடிக்கப் போறேன் என்று கூறிவிட்டாராம். அதற்குள் முடித்து விஜய் சேதுபதியை அனுப்பிவிடலாம் ஆனால் அதற்கு நயன்தாராவும் தேதிகளை அள்ளிக் கொடுக்கணுமே?