விரட்டுங்கள்… அவர் விஜய் சேதுபதியாக கூட இருக்கலாம்!

சிக்னலில் பழைய ஜாவா பைக்கில் யாராவது ஹெல்மெட்டுடன் ‘தடதட’த்துக் கொண்டிருந்தால், நீங்கள் தாராளமாக அவரை விரட்டலாம். ஹெல்மெட்டிற்குள் இருப்பது விஜய் சேதுபதியாக கூட இருக்கலாம்! யெஸ்… விஜய் சேதுபதியின் ஆதர்ஷ பைக் ஆகியிருக்கிறது ஒரு பழைய ஜாவா ஒன்று. அந்த விஷயத்திலும் அவர் சிம்பிள்தான் போலிருக்கிறது. எப்படி?

நம் இளம் ஹீரோக்களை பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கிறது சூப்பர் பைக் கலாச்சாரம். அஜீத், சூர்யா, ஆர்யா, ஜீவாவெல்லாம் கூட அவ்வப்போது ஷுட்டிங் ஸ்பாட்டுக்கு பைக்கில் வந்து ஷாக் கொடுக்கிறார்கள்! சூர்யா தன் குழந்தையை அழைக்க மிக சாதாரணமாக பைக்கில் கிளம்பிவிடுகிறார். அஜீத்தெல்லாம் பெங்களூரிலிருந்து சர்வ சாதாரணமாக சென்னைக்கு ட்ரிப் அடிக்கிற அளவுக்கு பைக் பிரியர். இவர்கள் எல்லாருமே தேர்ந்தெடுப்பது ஹார்லி டேவிட்சன், டுகாட்டி மாதிரி அதி அற்புத அச்சச்சோ விலையுள்ள சூப்பர் பைக்ஸ். இதன் விலை பல பல லட்சங்கள்.

ஆனால் அந்த விஷயத்தில் விஜய் சேதுபதி சிம்பிள். சமீபத்தில் ஒரு பழைய ஜாவா ஒன்றை தேடி தேடி வாங்கியிருக்கிறார். அதை சிறப்பாக வடிவமைத்து தரவும் சொன்னாராம். அவர் நினைத்தபடி வந்தமைந்த ஜாவாவில்தான் இப்போது சென்னையை சுற்றி சுற்றி வருகிறார் விஜய் சேதுபதி. அவ்வப்போது படப்பிடிப்புகளுக்கும் இதில்தான் வருகிறார்.

கார்னா பத்மினி? பைக்னா ஜாவாவா? என்னே ஒரு டேஸ்ட்யா மனுஷனுக்கு!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
இது நாலாவது முறை! இன்னும் திருப்தி அடையாத முருகதாஸ்

இது குழப்பமா? ஃபைன் ட்யூனா தெரியாது! ஆனால் இன்னும் தீட்டிக் கொண்டேயிருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். ஒரு படத்தை படமாக்குவதும், பாடவதியாக்குவதும் எடிட்டிங்தான். ஒரு சுமாரான படத்தையும் சூப்பராக்கிவிட முடியும்...

Close