விக்ரம் ஏ.எம்.ரத்னம் கூட்டு? ஆரம்ப நிலையிலேயே அவுட்டு!

நல்ல இயக்குனர்கள் எங்கிருந்தாலும், “நம்ம கம்பெனிக்கு வந்துட்டு போங்க” என்பார் ஏ.எம்.ரத்னம்! அவர் தேர்வு சொதப்பாது என்பது ஒரு புறம் இருக்க, ஏ.எம்.ரத்னம் கம்பெனியில் கமிட் ஆகிட்டா, காலம் முழுக்க நிலாச்சோறு என்கிற நிம்மதியும் வரும் பெரும்பாலான இயக்குனர்களுக்கு. படம் நன்றாக வர வேண்டும் என்றால், படாத பாடு பட்டாவது அதை செய்து கொடுப்பது அவரது வழக்கம் என்பதால்தான் இப்படியெல்லாம் நம்பிக்கை வைக்கிறார்கள் அவர்களும்.

தற்போதைய சங்கதி என்ன?

டிமாண்டி காலனி என்கிற வசூல் வெற்றி படத்தை கொடுத்த இயக்குனர் அஜய் ஞானமுத்து, ஏ.எம்.ரத்னம் அழைப்பின் பேரில் அவருக்கு ஒரு கதை சொன்னாராம். இருவரும் பேசி படத்தின் ஹீரோவை பைனல் பண்ணியிருக்கிறார்கள். அவர்தான் விக்ரம். பத்து எண்றதுக்குள்ள பிரமாதமா ரெடியாகிட்டு இருக்கு. அதுக்கு பிறகு ஆனந்த் சங்கர் டைரக்ஷன்ல ஒரு படம் பண்றேன். அந்த இரண்டு படங்களுக்கு பிறகு நம்ம படத்தை வச்சுக்கலாம் என்றாராம் விக்ரம். சம்பளம்?

அதுக்குள்ளே பேசினா, மன்னாரங் கம்பெனிக்கு லாஸ் வருமே? ரெண்டு படமும் தாறுமாறா ஓடுச்சுன்னா சம்பளத்தை இருபது கோடி வரைக்கும் ஏத்தலாமே என்கிற பேராசையில், “அதுக்கு இப்ப என்ன அவசரம்? பிறகு பேசிக்கலாம்” என்று கூறிவிட்டார் சீயான். அதற்கப்புறம்? வெங்காய லாரியதான் வெள்ளம் சூழ்ந்துருச்சே? வெளிநாட்டுக்கு போயிருக்கிறார் விக்ரம். அவர் வந்து சேர்ந்தாலும், படம் பற்றி பேசுற மூடில் இல்லையாம் ரத்னம்!

இதுதான் இன்றைய நிலவரம். ஆனால் சினிமாவில்தான் என்ன வேணும்னாலும் நடக்குமே?

2 Comments
  1. srimanik says

    Hi, Am your regular reader. Many times am watched, Always you write against Vikram. I dont know why this happen from you.

  2. shan says

    yen oru nalla nadiganuiku opposite a news podura………. vikram sir mathiri tamil ille hollywood la kuda illanu super star soli irukathu apo ni yaruda mokka news F..k

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
விஷாலுக்கு சால்வை? வேலை இழந்த பெண் நிருபர்!

‘ஐயோ பாவம்’ என்பதை தவிர வேறு சொல் இல்லை இந்த சம்பவத்தை கேட்டால்! ஒரு நிருபருக்கு தனிப்பட்ட கருத்து இருக்காதா? என்கிற பெரும் கேள்வியை எழுப்பியிருக்கிறது ஒரு...

Close