ரஜினி அஜீத் விஜய்க்கு பிறகு அதிகாலை 4.30 மணி ஷோ! சாதித்தார் தனுஷ்!

ஒட்டடை பலத்திலதான் உத்திரமே நிக்குது என்பார் நாகேஷ். மார்க்கெட்டில் மாதா மாதம் ‘முட்டை’ வாங்குகிற ஹீரோக்கள் கூட, “என் ரசிகர்கள் இருக்காங்க. எனக்கு அது போதும். வேற எவன் தயவும் தேவையில்ல….” என்றெல்லாம் பொங்கி பொங்கி பேட்டிக் கொடுப்பார்கள். (இருக்கிற கொஞ்ச நஞ்ச சப்போர்ட்டும் போச்சுன்னா அப்புறம் கொசு கூட மதிச்சு கடிக்காதே… என்கிற அச்சம்தான் காரணம்)

தமிழ்சினிமா ஹீரோக்களின் இக்கட்டான இந்த சுச்சுவேஷனில்தான் சில ஹீரோக்களுக்கு மட்டும் அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் ரசிகர் மன்ற ஷோ ஓட்டப்படுகிற அதிசயமும் நடக்கிறது. ரஜினியின் கபாலிக்கு அதிகாலை மூன்று மணிக்கெல்லாம் ரசிகர்கள் கூடி, கொண்டாடியதை இப்பவும் யூ ட்யூப் சேனலில் பார்த்து பரவசப்படலாம்.

அஜீத் விஜய் படங்களுக்கு கேட்கவே வேண்டாம். அந்த முதல் நாள், முதல் ஷோ, கிராமபுறங்களில் நடக்கும் ஊர் திருவிழாக்களுக்கு ஒப்பானது. ஆட்டம் பாட்டம், மயிலாட்டம் கரகாட்டம் என்று பரவசப்படுத்தி விடுகிறார்கள் ரசிகர்கள். அந்த வரிசையில் தனுஷ் சேர்ந்திருப்பதாக எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்.

இல்லையென்றால் சென்னையில் அதிகாலை நாலரை மணிக்கு ஷோ ஓப்பன் பண்ணுவார்களா? அந்த விடியற்காலை இருட்டிலும் வெள்ளேன பால் ஊற்றி சுள்ளென கட் அவுட்டை நனைத்தது ரசிகர்கள் கூட்டம்.

கொடி பிரம்மாதம் என்று ரிசல்ட்டும் வர ஆரம்பித்திருக்கிறது. ஒரு ஹிட் வந்தே தீரணும் என்று காத்துக் கிடந்த திருவாளர் பொயட், இனி தமிழ்சினிமாவில் எட்ட முடியாத ஹைட்டில் நிற்பார். வாழ்க… வளர்க!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
The pictures of Legendary Sivakumar 75 event & Paintings of Siva Kumar Book launch – stills Gallery

Close