என்னை அறிந்தால் பொங்கலுக்கு இல்லை! ஜனவரி 29 ந் தேதிதான் ரிலீஸ்
‘என்னை அறிந்தால்’ படப்பிடிப்பு சமயத்தில் அஜீத்திற்கும், டைரக்டர் கவுதம் மேனனுக்கும் ஏற்பட்ட மனத்தாங்கல் காரணமாக ஐந்து நாட்கள் அஜீத் படப்பிடிப்புக்கு வரவில்லை என்கிற தகவலை ஏற்கனவே தெரிவித்திருந்தோம். படம் பொங்கலுக்கு வருவது சந்தேகம்தான் என்றும் தெரிவித்திருந்தோம். https://wh1049815.ispot.cc/goutham-ajith-clash/ எப்படியோ… அவர்கள் இருவருக்குமான மனக்கசப்பை பேசி பேசி தீர்த்தவர் அப்படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம்தான். அதற்கப்புறம் வேலைகள் ஜரூராக நடந்தாலும், படத்தை பொங்கலுக்கு கொண்டு வர முடியாதபடி சிக்கல்.
பின் தயாரிப்பு வேலைகள் மீதி இருப்பதாலும், முழுசாக ஒரு பாடலை எடுக்க வேண்டியிருப்பதாலும், படத்தை ஜனவரி 29 ந் தேதி கொண்டு வரலாம் என்று முடிவெடுத்திருக்கிறார்களாம். ஜனவரி 26 ந் தேதி குடியரசு தினம் என்பதால் அரசு விடுமுறை வரும். அன்றே படத்தை வெளியிட்டு விடலாம் என்று தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் கருதினாலும், கூட்டுத்தொகை எட்டு வருவதால், 29 ந் தேதிக்கு தள்ளி வைத்தாராம் அஜீத்.
இன்றோ அல்லது நாளையோ அதிகாரபூர்வமான அறிவிப்புகள் வரலாம்!