இதுதான் அஜீத்தின் ‘என்னை அறிந்தால் ’ கதை!

‘லிங்கா’ படத்தின் தெலுங்கு பதிப்பு பாடல் வெளியீட்டு வெற்றி விழாவில் கலந்து கொள்வதற்காக ‘என்னை அறிந்தால்’ ஷுட்டிங்கிலிருந்து பர்மிஷன் போட்டுவிட்டு ஐதராபாத்திற்கு ஓடிச் சென்றார் அனுஷ்கா. விழா முடிந்த அடுத்த நொடியே சென்னைக்கு ரிட்டர்ன் ஆனார். ஏன் இந்த அவசரம்? எப்படியாவது பொங்கலுக்கு ‘என்னை அறிந்தால்’ படத்தை வெளிக் கொண்டு வர வேண்டுமே? அந்த வேகத்தில் போய் கொண்டிருக்கிறது ஷுட்டிங்.

இந்த படத்தின் கதை என்னவாக இருக்கும்? இதில் அருண்விஜயை நடிக்க வைத்திருக்கிறார்களே, அவருக்கு அஜீத் கொடுக்கப் போகும் ஸ்பேஸ் என்ன? வீரம் மாதிரி இந்த படமும் அட்டகாசமான வெற்றியை பெருமா? இதற்கெல்லாம் விடை தெரியாமல் துடித்துக் கொண்டிருக்கிறார்கள் அஜீத்தின் ரசிகர்கள். அவர்களுக்காக அலைந்து திரிந்து என்னை அறிந்தால் கதை சுருக்கத்தை கண்டுபிடித்து வந்தோம். இதுதான் அது.

அருண்விஜயும் அஜீத்தும் பிரண்ட்.ஸ். அருண் ஒரு லோக்கல் தாதா. அவரை பார்த்து ‘எப்படி பயப்படாம சண்டை போடுறீங்க?’ என்று அடிக்கடி வியக்கும் அஜீத்திடம், ‘நானெல்லாம் எம்மாத்திரம். எங்க பாஸ் ஒருத்தர் இருக்காரு. அவருகிட்ட கூட்டிட்டு போறேன். அவரை பார்த்தா நீ மிரண்டு போயிருவே’ என்கிறார் அருண். சொன்னபடியே ஒருநாள் அழைத்தும் போகிறார். அருண்ஜியின் பாஸ் அதாவது அவரது தலைவனை கண்டதும் அவனை ஷூட் பண்ணுகிறார் அஜீத். உடனடியாக அருண்ஜியையும் கைது செய்கிறார். ஏனென்றால் அஜீத் ஒரு போலீஸ் அதிகாரி. அதுவரை அஜீத் போலீஸ் அதிகாரி என்பதே தெரியாமல் பழகிய அருண்விஜய் ஷாக்காகிறார். அதற்கப்புறம் சிறையிலிருந்து வெளியே வரும் அருண், அஜீத்தின் முன்னாள் காதலியும் விதவையுமான த்ரிஷாவை கொன்றுவிட்டு, சவால் விடுகிறார். ‘இன்னும் நான் கொல்ல வேண்டியது ரெண்டு பேர் பாக்கியிருக்காங்க. ஒன்ணு த்ரிஷாவின் குழந்தை. இன்னொன்று உன் தோழி அனுஷ்கா. முடிஞ்சா தடுத்துக்கோ’ என்று அஜீத்திடம் முஷ்டியை உயர்த்துகிறார். இருவரையும் காப்பாற்றுவதுடன் அருணிடம் நேருக்கு நேர் மோதி இறுதியில் அஜீத் வெல்வதுதான் முடிவு.

எப்படி? கதை நல்லாயிருக்கா?

1 Comment
  1. Raj says

    நெஜமாவே நல்லா இருக்கு. இது தான் நிஜமான கதை என்றால், கௌதம் நிச்சயம் இதற்கு நல்ல திரைக்கதை அமைத்திருப்பார். பொறுத்திருந்து பார்ப்போம்.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
இருப்பதிலேயே பெரிய கஷ்டம் இதுதான்! தெலுங்கு லிங்கா பட விழாவில் ரஜினி பேச்சு!

ஐதராபாத்தில் ரஜினியின் ‘லிங்கா’ பட தெலுங்கு பதிப்பு பாடல் வெளியீட்டின் வெற்றிவிழா தி பார்க் ஓட்டலில் நடந்தது. படம் சம்பந்தப்பட்ட முக்கியமான கலைஞர்கள் மேடையில் இருக்க, இசைப்புயல்...

Close