“பாராட்டுறேன்னு கவுத்துட்டாப்ல! ” டேக் இட் ஈஸியான மூத்த நடிகர்!

இந்த காலத்தில் படம் எடுத்து அதை திரைக்கு கொண்டு வருவதென்பது, குள்ளமணியை சத்யராஜ் ஆக்குவதற்கு சமம்! அதை டேக் இட் ஈஸியாக செய்து கொண்டிருக்கிறார் ஒரு மூத்த நடிகர். அவர்தான் டெல்லி கணேஷ். லண்டனில் மகன் மஹாவை படிக்க வைத்த மிஸ்டர் டெல்லி அவரது ஆசை தெரிய வந்ததும்தான் ‘அலேக்’ ஆகிவிட்டார். “என்னப்பா சொல்றே?” என்று ஷாக் விலகாமல் இவர் கேட்க, “வேலைக்கு போற எண்ணம் இல்லேப்பா. நடிக்கிறேன்” என்றாராம் மஹா.

ஒரு நாள் ஷுட்டிங் ஸ்பாட்டில் இந்த விஷயத்தை அவர் சொல்லிக் கொண்டிருக்க, அதே செட்டில் உதவி இயக்குனராக வேலை பார்த்துக் கொண்டிருந்த கிருஷ்ணகுமார், மறுநாள் டெல்லி கணேஷ் வீட்டு வாசலில் நின்று காலிங் பெல் அடித்துவிட்டார். “சார்… நீங்க செட்ல பேசுனதை கேட்டேன். எங்கிட்ட ஒரு கதை இருக்கு. கேட்கிறீங்களா?” விட்டால் கொரியர்ல வந்து கவரை கிழிச்சிக்கிட்டு கதையை சொல்வாங்க போலிருக்கே என்று ஆச்சர்யப்பட்ட டெல்லி, “தம்பி நீயாச்சு. என் பையனாச்சு. அவன்கிட்டயே கதையை சொல்லு” என்று ஒதுங்கிக் கொள்ள, அடுத்த ஒரு மணி நேரத்தில் ஹீரோ ரெடி. டைரக்டர் ரெடி.

நிஜத்தில் இந்த படத்தை சொந்த படமாக எடுக்க தன் ஷுட்டிங் பங்களாவை விற்று விட்டுதான் பணம் புரட்டினாராம் டெல்லி கணேஷ். இந்த தகவலை அவரிடமே கேட்டு வைத்தோம். “ஓ.. அதுவா? நான் ஒண்ணும் வெளியாள்ட்ட விக்கலே. என் பொண்ணுகிட்ட இப்படி பணம் வேணுமேமான்னு சொல்லிகிட்டு இருந்தேன். அவங்களே, நான் தர்றேன்பான்னு சொல்லிட்டாங்க. நானும் சும்மா வாங்கக்கூடாதேன்னு பத்திரத்தை கொடுத்திருக்கேன். இந்த விஷயம் வெளியில தெரியாமலே போயிருக்கும். என்னுள் ஆயிரம் படத்தின் ஆடியோ ரிலீசுக்கு வந்த அந்த நடிகர் இதை சொல்லிட்டாரு. தன் மகனுக்காக வீட்டையே வித்துட்டு படம் எடுத்துருக்கார், தெரியுமான்னு என்னை பாராட்டுவதா நினைச்சு கவுத்துட்டாப்ல. இல்லேன்னா இந்த விஷயம் யாருக்கும் தெரிஞ்சுருக்காது” என்றார் ஆதங்கத்துடன்.

சரி… இப்போதைய நிலைமை எப்படி? டெல்லி கணேஷே உலகம் முழுக்க ‘என்னுள் ஆயிரம்’ படத்தை சொந்தமாக ரிலீஸ் செய்கிறார். ஆயிரம் லட்சம் ஆகி, லட்சம் கோடியாக வாழ்த்துவோம். நல்லா வருவீங்க மஹா!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
எல்லாத்துக்கும் வர்ற டிஆரு இப்ப எங்கய்யா போனாரு?

டி.ராஜேந்தருக்கும் புலி பட தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமாருக்கும் திடீர் நட்பு மலர்ந்தது. மலர்ந்த அந்த நட்பு ‘புலி’ பட ரிலீஸ் பிரச்சனையின்போது வளர்ந்தது. அதற்கப்புறம் அதே செல்வகுமார் ரிலீஸ்...

Close