எந்திரன்2 ல் இலங்கை தமிழ் பாடகர்கள்! வெடித்து அடங்கிய பிரச்சனை!
எங்க ஊரு துட்டுக்காரன், அப்படியே எங்க ஊரு பாட்டுக்காரன்களையும் ஆட்டத்துல சேர்த்துக்குவாரா? இலங்கை வாழ் தமிழர்களின் இப்போதைய எதிர்பார்ப்பு இதுதான். 2ஓ படத்தில் (ரைட்ஸ் பிரச்சனையில் எந்திரன் என்ற வார்த்தைகயை பயன்படுத்தக்கூடாது என்பதால்தான் இந்த 2ஓ) இலங்கையை சேர்ந்த பாடகர்கள் சிலரை பாட வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டாராம் ஏ.ஆர்.ரஹ்மான்! ஆனால் இதற்கு அப்படத்தின் தயாரிப்பாளரும், இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்த தமிழர்களில் நிமிஷத்துக்கு நிமிஷம் லட்சங்களையும் கோடிகளையும் குவித்து வரும் சுபாஷ்கரன் அல்லிராஜா தடுத்துவிட்டதாகவும் ஒரு செய்தி இலங்கையில் பரவியிருக்கிறது.
வெட்டியா புலம்பறதை விட்டுட்டு அவர்ட்டயே கேட்ற வேண்டியதுதானே என்று சுபாஷ்கரணேயே லைனில் பிடித்துவிட்டது இலங்கையிலிருந்து வெளிவரும் லங்காசிறீ.காம். கேள்வியை எதிர்கொண்ட சுபாஷ்கரன் அல்லிராஜா, கொடுத்த விளக்கம்தான் இது.
“இது தவறான செய்தி. ஏ.ஆர்.ரஹ்மான் மாதிரியான பெரிய இசையமைப்பாளர் ஒரு முடிவெடுக்கும் போது அதை செய்ய வேண்டாம் என்று சொல்கிற சுதந்திரம் எனக்கு இருக்குமா? என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும். அதுமட்டுமல்ல, அப்படியொரு ஆசை அவருக்கு இருந்தால் அதை மகிழ்ச்சியோடு நானும் வரவேற்பேன்” என்பதுதான் அவர் சொன்ன பதில்.
அதுவும் நிஜம்தான்!