லவ்வூ… ஃபீலாயிட்டாப்ல? நடிகையை சுற்றி சுற்றி வரும் எடிட்டர்!

‘ஏம்ப்பா… ஒரு பெண்ணை அறிமுகப்படுத்தி வைக்கறது தப்பா?’ என்கிற அளவுக்கு தாறுமாறாக டென்ஷன் ஆகிக் கிடக்கிறார் அந்த புதிய இயக்குனர். இவர் புதிதாக துவங்கியிருக்கும் படத்தில் ஒரு புதுமுகத்தை ஹீரோயினாக அறிமுகப்படுத்துகிறார். ஆபிசில் சின்ன அளவில் போடப்பட்டது பூஜை. தனது சிஷ்யனை வாழ்த்துவதற்காக வந்திருந்தார் அந்த பிரபல எடிட்டர். குருநாதரின் ஆசியை ஏக போகத்தில் அனுபவித்த அறிமுக இயக்குனர், மரியாதை கலந்த அன்போடு, ‘சார்… இதுதான் நம்ம படத்து ஹீரோயின். பெயர் தக்சா’ என்று ஒரு இளம் பெண்ணை அறிமுகப்படுத்தி வைக்க, ஒரு வணக்கத்தை வைத்த பின் பரஸ்பரம் செல்போன் எண்களை மாற்றிக் கொண்டார்கள் இருவரும்.

அதற்கப்புறம் அங்கிருந்து கிளம்பிப் போன எடிட்டர் அன்று மாலையே நடிகைக்கு போன் அடித்துவிட்டார். ‘உங்களை பார்த்ததிலிருந்தே நான் கொஞ்சம் டிஸ்ட்ரப் ஆகிட்டேன்’ என்று ஆரம்பித்து அந்த அறிமுக நடிகையின் அழகை வர்ணிக்க, எதிர்முனை உஷாராகி விட்டது. மோர் பானையை மூடி வைக்கலேன்னா, போற வர்ற பூனையெல்லாம் நாக்கை சப்புக் கொட்டும் என்பதை சட்டென்று உணர்ந்ததால், தனது செல்போன் பேச்சை அவசரம் அவசரமாக கட் பண்ணி தொடர் வர்ணனையை தவிர்த்தார்.

அதற்கப்புறம் நடந்ததுதான் இறைவன் போட்ட முடிச்சு போலும். அதே பெண் வேறொரு கன்னட படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார். அதே படத்தை தமிழிலும் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். படத்தின் பெயர் ‘ஒரு மெல்லிய கோடு’. இசை இளையராஜா. எதார்த்தமாக பெங்களூர் போன நம்ம எடிட்டர், அங்கு நடக்கும் இந்த ஷுட்டிங்குக்கு வேறு ஏதோ வேலையாக சென்றாராம். பார்த்தால், தனது மனம் கவர்ந்த அதே ஹீரோயின் அங்கே.

அட…இதென்னடா மயில்தோகை கிடைக்குமான்னு பார்க்கப் போனா, மயிலே கிடைக்குதே என்று மனம் மகிழ்ந்து ஸ்பாட்டிலேயே வைத்து, தான் அந்த பெண்ணால் கவிழ்க்கப்பட்டு கன்னாபின்னா காதலோடு திரிவதை சொல்லிவிட்டார். இதையெல்லாம் எதிர்பார்க்காத தக்சா, உடனே ஒருவருக்கு போன் அடித்தார். அது யாராக இருக்கும்? இவரை அறிமுகப்படுத்தி வைத்தாரே, ஒரு அறிமுக இயக்குனர். அவருக்குதான். ‘என்ன சார்… இப்படியொரு ஆளை அறிமுகப்படுத்தி வச்சுட்டீங்க. சொன்னாலும் புரிஞ்சுக்க மாட்டேங்கிறாரு. ப்ளீஸ் நீங்களாவது சொல்லி அவரை ஆஃப் பண்ணுங்க’ என்றார்.

குருநாதர் முகத்தை பார்த்து இந்த விஷயத்தை எப்படி சொல்வது? தவியாக தவிக்கிறார் அந்த இயக்குனர். ஆமாம்… அந்த எடிட்டர் விஜய் ஆன்ட்டனியான்னுதானே கேட்கிறீங்க? ஐயே… அவரு மியூசிக் டைரக்டரு. நாங்க சொல்றது வெறும் எடிட்டர். வெறும் எடிட்டர். வெறும் எடிட்டர்.

Read previous post:
கஷ்டத்தை புரிந்து கொண்டவர் ஸ்ருதிஹாசன்! விஜய் பட தயாரிப்பாளர் பெருமிதம்

PVP நிறுவனம் தயாரிப்பில் நாகார்ஜுனா – கார்த்தி நடிக்கும் புதிய படத்தில் ஸ்ருதிஹாசன் நடிக்காததால், ஸ்ருதிக்கு எதிராக பல நடவடிக்கைகளை அந்நிறுவனம் எடுத்து வருகிறது. குறிப்பாக அந்தப்...

Close