ஹ்ம்… ஒருவழியா இப்படிதான் அமைஞ்சுது இந்தப்படம்!

ஒருபுறம் ரஜினி ஷங்கர் கூட்டணியில் 2,ஓ என்ற யானையை கட்டி தீனி போட்டுக் கொண்டிருக்கிறது லைக்கா. இன்னொரு பக்கம் 2.ஓ வின் காஸ்ட்யூம் செலவை கூட தாண்டாத பட்ஜெட்டில் இன்னொரு படத்தையும் எடுத்துக் கொண்டிருக்கிறது அந்த நிறுவனம். இந்த மலைக்கும் பள்ளத்திற்குமான சம்பவம் எப்படி நடந்தது? ஏன் நடந்தது?

லைக்கா நிறுவனத்தின் சினிமா தயாரிப்பு பொறுப்புகளில் முதுகெலும்பாக இருக்கிறார் ராஜு மகாலிங்கம். இவரை சந்திக்க வேண்டும் என்று விரும்பிய ஜி.வி.பிரகாஷுக்கு அவ்வளவாக பிடிகொடுக்கவில்லை ராஜு. ஏன்? இப்பவே தலைக்கு மேல வேலையிருக்கு. இவரும் வந்து புதிய விஷயங்கள் எதையாவது கேட்டால், அதற்கு நேரம் ஒதுக்க முடியாதே என்பதால் இருக்கலாம். சிலபல வற்புறுத்தல்களுக்கு பிறகு ராஜுவை சந்தித்த ஜி.வி.பிரகாஷ், ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ படத்தின் ஒன் லைன் கதையை சொல்ல, இருக்கையிலிருந்து லேசாக முன் பக்கம் வந்தாராம் ராஜுமகாலிங்கம். அந்த சிக்னல் போதாதா? மறுநாள் இயக்குனர் சாம் ஆன்ட்டனை அனுப்பி கதை சொல்ல வைத்திருக்கிறார் ஜி.வி. இவர் கதை சொன்ன ஒன்றரை மணி நேரமும் விழுந்து விழுந்து சிரித்த ராஜு மகாலிங்கம், 2.ஓ ஷுட்டிங் ஒரு பக்கம் போகட்டும். இந்த படத்தையும் ஆரம்பிப்போம் என்ற முடிவுக்கு வந்துவிட்டார்.

இந்த சாம் ஆன்ட்டன் ஜி.வி.பிரகாஷின் முதல் படமான (பென்சில்தான் முதல் என்றாலும்) டார்லிங் படத்தை இயக்கியவர். ஆனந்தியுடன் இணைந்து ‘த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா’ என்ற சூப்பர் டூப்பர் ஹிட் படத்தை கொடுத்த சென்ட்டிமென்ட் துரத்துமல்லவா? அதே நினைப்பில் ஆனந்தியையே நாயகியாக்கிவிட்டார் ஜி.வி. பொதுவாக மாநிறமாக இருக்கும் ஆனந்தி, இந்த படத்திற்காக டின் டின்னாக மேக்கப் தடவி செக்கச்செவேல் ஆகிக்கிடக்கிறார். (அதற்காக பிரஸ்மீட்டுக்கும் அதே சுண்ணாம்பு பட்டி தடவல் சமாச்சாரத்தோட வரணுமாம்மா?) படத்தில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் புகழ் பெற்ற பாடலான ‘கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்’ பாடலை ரீமிக்ஸ் அடித்திருக்கிறார் ஜி.வி.

ம்… இதுவும் நல்லாதான் இருக்கு!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
தத்ரூபமான ரஜினி சிலை! ரசிகர்களை சந்திக்க வருகிறார் ஊர் ஊராக?

கபாலி கொண்டாட்டங்கள் ஆரம்பித்துவிட்டன. நான்கு மொழிகளில் வெளியாகவிருக்கும் கபாலி, சுமார் 5000 தியேட்டர்களை ஆக்ரமித்துக் கொள்ளும் என்றெல்லாம் பேசப்படுகிறது. இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட முழுமையான ட்ரெய்லர்...

Close