வெள்ளத்தில் சிக்கித்தவித்த சினிமாக்காரர்கள்! அட.. இவங்களுமா?

மழைக்கு தெரியுமா செலிபிரிட்டி என்று? சென்னையின் கொடூர வெள்ளத்தின் கையில் சிக்கிக் கொண்டு குழந்தைகளும், குடும்பங்களுமாக தத்தளித்துக் கொண்டிருக்க, அந்த தத்தளிப்பிலிருந்து நடிகர் நடிகைகளும் தப்பவில்லை என்பதுதான் கொடுமை. என்னதான் பங்களா? பார்க்கிங்கில் நாலு கார் என்று வசதியாக இருந்தாலும், ‘ஹலோ சவுக்கியமா’ என்று வீட்டுக்குள் வெள்ளம் வந்தால் என்னாவது? கிரவுண்ட் புளோரிலிருந்து முதல் மாடிக்கு ஓடினாலும் பின்னாலேயே துரத்துகிற வெள்ளத்தை என்னவென்பது?

அப்படிதான் சிக்கிக் கொண்டார்கள் நடிகை லட்சுமியும், விக்னேஷும். வாட்ஸ் அப்பில் தனது நிலை குறித்து புலம்பிய லட்சுமி, என் குடும்பம் வெளியில் வர முடியாமல் வீட்டுக்குள் மாட்டிக்கிட்டோம். யாராவது இந்த தகவலை நடிகர் சங்கத்துக்கு பாஸ் பண்ணுங்க. எங்களை சேவ் பண்ண சொல்லுங்க என்று கதறியிருந்தார். நடிகர் விக்னேஷ், யாராவது என் வீட்டுக்கு போட் அனுப்பி உதவுங்க என்று தனது மொபைல் எண்ணை வாட்ஸ் ஆப்பில் வெளியிட்டிருந்தார்.

இதற்கிடையில் மனிதாபிமானம் மிக்க ஏஜிஎஸ் தியேட்டரும், சத்யம் தியேட்டரும் தங்கள் தியேட்டர் வளாகத்தை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தங்குவதற்காக திறந்துவிட்டன. நடிகை ரோகிணி, “என் வீட்டில் ஏழு பேர் தங்க முடியும். பாதிக்கப்பட்டவர்கள் வரலாம்” என்று ட்விட்டர் மூலம் அழைப்பு விடுத்திருந்தார்.

இப்படி நாலாபுறத்திலிருந்தும் மனிதாபிமானம் பொங்கி வழிந்து கொண்டிருந்த அதே நேரத்தில்தான், சென்னையில் ரஜினிக்கு சொந்தமான ராகவேந்திரா கல்யாண மண்டபம் இழுத்து பூட்டப்பட்டது. இது ரஜினிக்கு தெரிந்து நடந்ததா, தெரியாமல் நடந்ததா? அந்த கடவுளுக்கே வெளிச்சம்!

பின்குறிப்பு- நடிகர் விஜய்க்கு சொந்தமான ஷோபா திருமண மண்டபம் பொதுமக்கள் தங்குவதற்கு வசதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு உணவும் ஏற்பாடு செய்திருக்கிறார் விஜய்

கடைசித் தகவல்- ரஜினியின் ராகவேந்திரா மண்டபம் பொதுமக்களின் வசதிக்காக அதற்கப்புறம் திறக்கப்பட்டுவிட்டது.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
வெள்ள நிவாரணம்! ரஜினி 10 லட்சம் நிதி

தத்தளிக்கும் சென்னையில் தவியாய் தவிக்கிறார்கள் மக்கள். இந்த மழை பேரழிவுக்கு அடையாளமாக சென்னையை அச்சுறுத்திக் கொண்டிருக்க, வீடு, உடமைகளை இழந்து நடு ரோட்டுக்கு வந்துவிட்டார்கள் மக்கள். இந்த...

Close