சூரி சொல்றது பொய்யி! முன்னாள் குளோஸ் ஃபிரண்டு விஷ்ணு விஷால் குமுறல்

 

‘பெரிய மனுஷங்க சண்டை போட்டா எண்ணை சட்டியே எரிஞ்சுரும்‘ என்பார்கள். அப்படிதான் ஆகிவிட்டது ஒரு காலத்தில் குளோஸ் ஃபிரண்டாக இருந்த விஷ்ணுவிஷால் – சூரி கதை. விஷ்ணு விஷாலின் வெற்றி படங்களில் எல்லாம் சூரியும் இருந்திருக்கிறார். சூரியின் வெற்றியில் விஷ்ணு விஷாலின் பங்கும் இருந்திருக்கிறது. அப்படியிருந்த நட்பில்தான் புயலடித்துக் கொண்டிருக்கிறது. எல்லாம் காசு, பணம், துட்டு, மணி… மணி…

தனக்கு நிலத்தையும் வாங்கிக் கொடுத்துவிட்டு, அதில் போர்ஜரியும் செய்துவிட்டார் என்று விஷ்ணுவிஷாலின் தந்தை ரமேஷ் குடவாலா மீது போலீசில் புகார் அளித்துவிட்டார் சூரி. போலீசுக்கே பெட்டிஷனா, அதிகாரிக்கே அலப்பறையா என்று சொல்ல முடியாது. ஏனென்றால் சூரி காத்திருந்தது போலீஸ் உயரதிகாரியான ரமேஷ் குடவாலாவின் ரிட்டையர் மென்டுக்காக. அதற்கப்புறம் இவர் கொடுத்த புகாருக்கு நல்ல மகசூல். விசாரணை ஏற்றுக் கொள்ளப்பட்டு எப்.ஐ.ஆரும் போடப்பட்டுவிட்டது. வழக்கு இப்போது நீதிமன்றத்தில்.

இது சம்பந்தமாக அவ்வப்போது அறிக்கை மூலம் பேசி வந்தாலும் முதன் முறையாக பிரஸ் முன் தோன்றி விளக்கமளித்தார் விஷ்ணுவிஷால். “என் அப்பாவின் காலில் விழுந்து நீங்கதான் என் தெய்வம்“ என்று சொன்னவர்தான் இந்த சூரி. அவரின் இருண்ட பக்கங்களை நான் சொன்னா நல்லாயிருக்காது என்றார். (இருட்டுல நடக்கறதெல்லாம் வெளிச்சத்துக்கு வந்தா கோடம்பாக்கமே கும்முரு டப்பரு ஆகிவிடும் என்பதெல்லாம் தனிக்கதை)

அப்படியே அவர் சொன்ன மேலும் பல தகவல்கள் மனுஷன் எவ்வளவு துயரத்தில் இருக்கிறார் என்பதையே காட்டியது. “கொரானோ பரவல் அதிகமா இருக்கும்னு எங்கப்பாவை வீட்டை விட்டே வெளியில் செல்லாதவாறு பார்த்துக் கொண்டோம். அந்த நேரத்தில் இவர் புகார் கொடுத்ததால் அவர் கோர்ட், போலீஸ் ஸ்டேஷன், வக்கீல் என்ற அலைய வேண்டியதாகிவிட்டது. இது எனக்கு ரொம்ப மன வேதனையை கொடுத்துருச்சு.“

என் அப்பா எந்த தப்பும் செய்யல. எனக்கோ என் அப்பாவுக்கோ இந்த விஷயத்தில் எந்த தொடர்பும் இல்ல. இதை சூரியே சீக்கிரம் புரிஞ்சு வருத்தப்படுவாரு என்றார் விஷ்ணு.

“அரிசிய கொட்டுனா அள்ளிடலாம். புரளிய கொட்டுனா?“ சூரி நீங்க என்னத்தை கொட்டுனீங்களோ?

அதை தெரிஞ்சுக்கவாவது சீக்கிரம் தீர்ப்ப கொடுங்க எஞ்ஜாமி…

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
கீ போர்டுல பாட்டு ஆன் போர்டுல பூட்டு!   கம்பி எண்ணும் மியூசிக் டைரக்டர் அம்ரீஷ்

 

Close