பத்திரிகையாளர் ஷோவில் விரட்டியடிக்கப்பட்ட மன்சூரலிகான்!

பத்திரிகையாளர்களை தரக்குறைவாக விமர்சிப்பதும் பொது இடங்களில் பேசி கைதட்டல் வாங்குவதும் நடிகர்களுக்கு புதிதல்ல. ஏற்கனவே சில நடிகர்கள் வாய்க்கு வந்தபடி பேசி வரலாறு காணாத அளவுக்கு சிக்கலுக்குள்ளானார்கள். அதற்கப்புறம் புடிக்கலேன்னாலும் பொண்டாட்டி என்கிற நிலையில் இருப்பது அவர்கள்தான் என்பதை புரிந்து கொண்டார்கள். மனம் விட்டு மன்னிப்பும் கேட்டுக் கொண்டார்கள்.

இந்த வரலாறெல்லாம் தெரிந்தே வாய்க்கு வந்தபடி பேசியிருக்கிறார் மன்சூரலிகான். சென்னையில் நடந்த ஒரு பட விழாவில் அங்கு வந்திருந்த பத்திரிகையாளர்களை தாறுமாறாக பேசிய மன்சூரலிகானை, நாகரீகம் கருதி விட்டுவிட்டார்கள் அங்கிருந்த பத்திரிகையாளர்கள்.

அதற்கப்புறம் மறுநாள் சென்னையில் நடந்த ஒரு கங்காரு படத்தின் பத்திரிகையாளர் ஷோவுக்கு வந்திருந்தார் மன்சூரலிகான். இதை கவனித்த பத்திரிகையாளர்கள், இந்த ஷோ எங்களுக்கானது என்பதால்தான் நாங்கள் வந்தோம். எங்களை கேவலமாக பேசிய மன்சூரலிகானும் இங்கு எங்களோடு அமர்ந்து படம் பார்ப்பார் என்றால், நாங்கள் வெளியேறுகிறோம் என்றார்கள்.

உடனே எழுந்த மன்சூர், நானே ஒரு பத்திரிகை காரர்தான். அது தெரியுமா உங்களுக்கு என்றார். அதற்கப்புறம் நான் தரக்குறைவாக யாரையும் பேசவில்லை என்றார். அதற்குள், முதல் நாள் அவர் பேசியதை கேட்டு காது வெந்துபோன பத்திரிகையாளர்கள், பேசலைன்னு பொய் சொல்லாதீங்க. கிளம்புங்க என்றார்கள்.

அதற்கப்புறம் அங்கிருந்து முணுமுணுத்தபடியே கிளம்பினார் மன்சூர். ஷோ சிறப்பாக நடந்தது.

Read previous post:
என் அடுத்த படத்திலும் புன்னகைப்பூ கீதாதான் ஹீரோயின்!

நாகேந்திரன் யார் என்பது இன்டஸ்ரிக்கு தெரியும். ஆனால் பொதுமக்களுக்கு தெரியாது. புன்னகைப்பூ கீதா யார் என்பது பொதுமக்களுக்கு தெரியும். ஆனால் அவர்களுக்கு தெரிந்தளவுக்கு இன்டஸ்ட்ரிக்கு தெரியாது. இரண்டுக்குமான...

Close