தேர்தலுக்கு முன்னே வாங்கப்பா… கவுண்டமணியின் குரலுக்கு நோ ரெஸ்பான்ஸ்!
49 முறை ஓ போட்டாலும் கவுண்டமணியின் வேண்டுகோளை யாரும் கேட்பதாக இல்லை. கடந்த பல வருடங்களாகவே ‘அட போங்கப்பா… நீங்களும் உங்க சினிமா அறிவும்’ என்று ஒதுங்கியிருந்த கவுண்டரின் ‘கவுன்ட்டரை’ ஓப்பன் பண்ணிய பெருமை 40 ஓ படத்தின் டைரக்டர் பி.ஆரோக்கியதாசையே சாரும்.
இன்று விவசாய நிலங்கள் எல்லாமே பிளாட்டுகளாக மாறிக் கொண்டிருக்கும் அவலங்களையும் விவசாயத்தின் பெருமையையும் கவுண்டரை விட்டால் சொல்வதற்கு ஏற்ற முகம் ஏது? குரல் ஏது? கம்பீரம் எது? என்று நினைத்திருப்பார் போலும். அதற்கேற்றார்போல அத்தனை லட்சணங்களையும் உள்ளடக்கிய கவுண்டர், இந்த படத்தில் ஒரு கம்பீரமான விவசாயியாக நடிக்கிறார். விவசாயத்தை பற்றிய ஒரு பாடலையும் உருவாக்கி உழவின் முக்கியத்துவத்தை உணர்த்திக் கொண்டிருக்கிறது படக்குழு.
அப்படியே படத்தில் இன்னொரு ஸ்டிராங்கான விஷயமும் இருக்கிறதாம். அதுதான் 49 ஓ. தேர்தலில் யாருக்கும் ஓட்டு இல்லை என்பதற்கான பட்டன். சரியாக எலக்ஷன் நேரத்தில் இப்படியொரு படத்தை வளர்த்துக் கொண்டிருக்கும் படக்குழுவினர், அதை தேர்தலுக்கு முன்பே ரிலீஸ் செய்தால்தானே போட்ட உழைப்புக்கு பலன் இருக்கும்? கவுண்டரின் கவலையே இதுதானாம். பாராளுமன்ற தேர்தலுக்குள்ளே படத்தை ரிலீஸ் பண்ணுங்கப்பா என்கிறாராம் இயக்குனரிடம்.
தேர்தலுக்கு முன்பு வடிவேலுவின் ‘தெனாலிராமன்’ வருகிறது. அப்படியே கவுண்டரின் படமும் வந்தால், நாட்டுக்கே கொண்டாட்டம்தான். ஆனால் எங்கேயாவது எசகு பிசகு ஆகிவிட்டால் என்னாவது என்கிற அச்சத்தினால் சற்று மந்தகதியிலேயே நடக்கிறதாம் வேலைகள். எப்படியிருந்தாலும் தேர்தல் நேரத்தில் இந்த படத்திற்கு வேலையில்லை என்ற மனநிலைக்கு மக்கள் வந்தாலும், கவுண்டர் வரமாட்டார் போலிருக்கிறது.
கவுண்டமணியை குளிர்விக்கணும்னா தெனாலிராமனுக்கு ஒரு டிக்கெட் எடுத்து கொடுத்தா சரியா இருக்கும்னு தோணுது (அட… யாருப்பா அது அடிக்க வர்றது?)
Is Goundamani eyeing elections for his 49-O?
Goundamani has wrapped up the shoot of his comeback film and post production work is going on full swing. Ironically 49-O represents no choice button on the electronic voting machine. Goundamani desires to release the film before the elections, as the film speaks on agriculture and its advantages which will be blared in Goundamani’s voice. However the makers of the film including director Arokiadass are in dilemma if the film is misconstrued against any political party and may take the wrath. So they have wisely decided to go slow and release the film only after the election.