அந்த விஷயத்தில் நயன்தாராவும் கவுண்டமணியும் ஒண்ணு!

‘அதார்றா… தேங்கா மண்டையன் என்னய போய அந்த புள்ளக் கூட கம்பேரு பண்ணுறது?’ என்று கவுண்டர் குரல் காதில் ஒலிக்க ஒலிக்க இந்த செய்தியை படித்துவிடுங்கள். ஏனென்றால் இதை படித்தாலும் கவுண்டர் அப்படிதான் கேட்பார்.

தற்போது இரண்டு படங்களில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார் கவுண்டமணி. ஒரு காலத்தில் தமிழ்சினிமா ரசிகர்களை திகட்ட திகட்ட சிரிக்க வைத்த இந்த மகா கலைஞன், அதற்கப்புறம் போங்கடா… நீங்களும் உங்க அலட்டலும் என்று அத்தனை இயக்குனர்களையும் தள்ளியே வைத்திருந்தார். அவர் ஏன் திடீர் இடைவெளியை ஏற்படுத்திக் கொண்டார் என்பதற்கு முறையான காரணங்களை கண்டு பிடித்துவிட்டால் அது லட்ச ரூபாய்க்கு ஈடானது. அவர் நடித்த இவ்விரு படங்களுமே இப்போது ரிலீசுக்கு தயாராகிவிட்டன. இந்த நிலையில்தான் பிரஸ்சை மீட் பண்ணி பிரமோஷனை ஆரம்பிக்கலாமா என்று கேட்டார்களாம்.

பொதுவாக அந்த காலத்திலிருந்து இந்த காலம் வரைக்கும் பேட்டியோ, பிரஸ்மீட்டோ என்றால் அந்த இடத்தில் கவுண்டரை பார்க்கவே முடியாது. நான் என்னத்தை செஞ்சுட்டேன்னு எங்கிட்ட பேட்டிக்கு வர்றீங்க? போய் விவசாயியை போட்டியெடுங்க. தொழிலாளியை பேட்டியெடுங்க? நான் என்னத்தைப்பா செஞ்சுட்டேன் என்று கழன்று கொள்வார். காலம் கவுண்டரை மாற்றிவிடுமா என்ன? மீண்டும் அதே வீராப்புடன்தான் இருக்கிறாராம். தம்பி… நான் அங்கெல்லாம் வந்து பேட்டி கொடுக்க மாட்டேன். படத்தை பார்த்துட்டு அது நல்லாயிருந்தா நல்லாயிருக்குன்னு எழுத சொல்லு. இல்லேன்னா நார் நாரா கிழிக்க சொல்லு. என்னைய ஆட்டத்துல இழுக்கலாம்னு மட்டும் நினைக்காத என்று கூறிவிட்டாராம்.

தலைப்பு? சரியாத்தானே வச்சுருக்கோம்!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
‘ஏசு கிறிஸ்துவின் பெயராலே… ’ ‘என்னை அறிந்தால் ’ தள்ளிப் போன கதை!

சமூக வலை தளங்களில் சமீபகாலமாக ஒரு ஹேஷ்யம் (யூகம்) நிலவி வருகிறது. ஜோஸ்யத்தை விடவும் மோசமான அந்த ஹேஷ்யத்தால், அஜீத்தின் இமேஜ் குட்டிச்சுவராகிக் கிடக்கிறது. வேறொன்றுமில்லை, அவர்...

Close