ஷூட்டிங் வராத அஜீத்! அதிர்ச்சியில் கவுதம்மேனன்! என்னை அறிந்தால் திக் திக்…
எப்படியாவது படத்தை பொங்கலுக்கு கொண்டு வந்துவிட வேண்டும் என்று றெக்கை கட்டி பறந்து கொண்டிருக்கிறது ‘என்னை அறிந்தால்’ படத்தின் தயாரிப்பு வட்டாரம். இயக்குனர் கவுதம் மேனனும், ஹீரோ அஜீத்தும் ஒத்துழைப்பு கொடுத்தாலொழிய அது நடக்கப் போவதில்லை. ஆனால் இந்த பொன்னான நேரத்தில், யார் கண் பட்டதோ? கடந்த வாரத்தில் ஐந்து நாட்கள் படப்பிடிப்புக்கே வரவில்லை அஜீத்.
ஒவ்வொரு நாளும் ஷுட்டிங் ஸ்பாட்டுக்கு யூனிட்டோடு கிளம்பிப் போகும் கவுதம், அஜீத் வராததால் கடும் ஏமாற்றத்தோடு திரும்பி வருகிறாராம். ஏன்? இருவருக்கும் ஏற்பட்டிருக்கும் உரசல்தான் காரணம். பொதுவாகவே அஜீத் இருக்கிறார் என்றால், அந்த ஏரியாவில் பேய் கூட்டம் கூடி விடும். ‘என்னை அறிந்தால்’ ஷூட்டிங் ஸ்பாட்டிலும் அதுதான் நடந்து வருகிறதாம். பல்லாவரம் பின்னி மில்லில் படப்பிடிப்பு நடந்து வந்தது. இங்குதான் ஷுட்டிங் பார்க்க ஆசைப்படுவோர் கூட்டம் உள்ளே நுழைந்து, அஜீத்-கவுதம் இடையே விரிசலை ஏற்படுத்திவிட்டது. அந்த காட்சியை பின்னி மில்லின் உள்ளேயே கூட எடுத்திருக்க முடியும். ஆனால் வேண்டுமென்றே அஜீத்தை வெளியில் அழைத்து வந்து படப்பிடிப்பு நடத்தினாராம் கவுதம். விஷயத்தை கேள்விப்பட்ட சுற்று வட்டாரம், ஒட்டுமொத்தமாக திரண்டு ஏரியாவுக்கு வந்து ஒரே ரசாபசம்.
வேறு வழியே இல்லாத முக்கியமான காட்சி என்றால் வெளிப்புற படப்பிடிப்பு சரி. ஆனால் தேவையே இல்லாமல் இப்படி வெளிப்புறத்தில் நடத்தி எல்லாருக்கும் டென்ஷன் தருகிறாரே என்கிற வருத்தமாம் அஜீத்திற்கு. இதை பலமுறை சொல்லியும் கவுதம் கேட்கவில்லை என்பதால், ஸ்பாட்டுக்கே போகாமல் தவிர்த்தாராம். அதுமட்டுமல்ல, இந்த படத்தின் க்ளைமாக்சிலும் அஜீத்திற்கு உடன்பாடு இல்லை என்று சொல்லப்படுகிறது.
இப்படியே போனால்…? என்னை அறிந்தால் இந்த பொங்கலுக்கு வருமா என்கிற சந்தேகத்தை கிளப்புகிறார்கள் படவுலகத்தில்.