நான் இயக்கிய ஹீரோக்களில் சிம்புதான் இப்படி! கவுதம்மேனன் ஓப்பன் டாக்!

சிம்புவுக்கே கூட இது இன்ப அதிர்ச்சியாக இருக்கலாம். கவுதம் மேனன் கொடுத்த சர்டிபிகேட் அப்படி! சிம்புவோடு டிராவல் பண்ணுவது என்பது, மதயானையை தூக்கி மடியில் வைத்துக் கொள்வதற்கு ஒப்பானது என்றுதான் டைரக்டர்கள் சொல்லக் கேட்டிருக்கிறோம். ஆனால் நேற்று கவுதம் மேனன் சிம்புவை பற்றி சொன்ன வார்த்தைகள், பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய விஷயம்.

“சிம்பு சொன்ன நேரத்துக்கு ஷுட்டிங்குக்கு வரமாட்டார் என்பது நிஜம்தான். ஆனால் லேட்டா வந்தாலும், அவ்வளவு ஈசியா நடிச்சுட்டு போய்டுவார். அதுமட்டுமில்ல… நான் வொர்க் பண்ணிய ஹீரோக்களிலேயே சிம்புதான் ரொம்ப கம்பர்ட். மற்ற ஹீரோக்கள்ட்ட அந்த எக்ஸ்பீயன்ஸ் எனக்கு கிடைச்சதில்ல. திரும்பவும் நான் சிம்புவை வச்சு படம் பண்ண ஆசைப்படுறேன்” என்றார். அவரது இந்த பதில் பிரஸ்சுக்கே கூட பேரதிர்ச்சிதான். ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் பிரஸ்மீட்டில்தான் இப்படியொரு பாராட்டு பத்திரம் வாசிக்கப்பட்டது சிம்புவுக்கு. ம்ஹ்ம்ம்… அதையெல்லாம் நேரில் கேட்க அவருக்குதான் கொடுத்து வைக்கவில்லை. ஏன்யா ஏன்? இந்த பிரஸ்மீட்டுக்குதான் அவர் வரவேயில்லையே!

பாடல்களும், அந்த காட்சிகளும் எப்படி? கவுதம் மேனனுக்கு நரை விழுந்தாலும், அவரது காதல் உணர்வுகளுக்கு திரை விழவில்லை என்பதை இஞ்ச் பை இஞ்ச் சொல்லிக் கொண்டேயிருந்தது ஒவ்வொரு பிரேமும்! ஏ.ஆர்.ரஹ்மானின் இசையல்லவா? அப்படியே அள்ளிக் கொண்டு போனது நம்மை.

“நான் பாட்டு கேட்டு ரஹ்மான் சாருக்கு தொந்தரவு கொடுத்ததேயில்ல. எப்பவாவது அவரே திடீர்னு போன் பண்ணி, “கம்போசிங் வச்சுக்கலாமா?” என்பார். ஒரே சிட்டிங்ல பாட்டு உருவாகிடும். தாமரை எழுத முடியாத சூழ்நிலை இருந்தப்போ மதன் கார்க்கி எழுதிக் கொடுத்தார். மற்றபடி தாமரை இரண்டு பாட்டு எழுதியிருக்காங்க” என்றார் கவுதம்மேனன்.

‘முதலில் யார் சொல்வது காதலை…’ என்கிற தாமரையின் பாடலை ஜென்மம் முடிகிற வரைக்கும் கூட கேட்டுக் கொண்டேயிருக்கலாம். அப்படியொரு இனிமை அதில்!

To listen Audio Click Below:-

https://youtu.be/B0GYeZfZB_Q

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
Ajith Already Knows The Modi Announcement.

https://youtu.be/N2TFBKr3Gnk

Close