விஜய் சேதுபதி வேண்டாம்! நலன்குமாரசாமி முடிவு?

‘யாரு நடிச்சா என்ன? என் கதை ஜெயிக்கும்’ என்று ஒரு படைப்பாளி நம்புவதில் தவறேயில்லை. ஆனால் தனக்கு முகம் கொடுத்த நடிகரை விட்டு விட்டு இன்னொருவர் பின்னால் போவதுதான் எந்த வகையில் சேர்த்தி என்று நினைக்க வைக்கிறது இந்த சம்பவம்.

‘சூதுகவ்வும்’ படத்தின் வெற்றிக்கு முன்பே ‘பீட்சா’ என்ற படத்தின் வெற்றியை ருசித்துவிட்டார் விஜய் சேதுபதி. ஆனால் வேடிக்கை…. இந்த சூது கவ்வும், பீட்சாவுக்கு முன்பே பேசப்பட்ட படம். விஜய் சேதுபதியின் தன ரேகையும் புகழ் ரேகையும் அழுத்தமாக இருந்ததன் விளைவு ரெண்டு படங்களுமே தாறுமாறான ஹிட். இன்றைய தேதிக்கு விஜய் சேதுபதி முன்னணி நடிகர்களில் முதல் பத்தில் ஒருவர். நல்லது. நாம் சொல்லப்போவது… இவ்வளவு பெரிய நடிகரை வேண்டாம் என்று சொல்லிவிட்டு, அறிமுகமான நாளில் இருந்தே தோல்வியை மட்டுமே தந்த ஒரு ஹீரோவை வைத்து ‘நானும் ஜெயிப்பேன்ல?’ நலன்குமாரசாமி களமிறங்கியிருக்கிறாரே அது பற்றிதான்.

சி.வி.குமார் தயாரிக்கும் இந்த படத்தில் முதலில் விஜய்சேதுபதிதான் நடிப்பதாக இருந்தது. திடீரென அவர் வேண்டாம் என்று நினைத்த நலன், ‘கவுதம் கார்த்தியை வைத்து எடுக்கிறேன்’ என்றாராம் சி.வி.குமாரிடம். இருந்தாலும் சிவி.குமாரின் அடுத்த தயாரிப்பில் விஜய் சேதுபதி இருக்கிறார் என்கிறது நம்பத் தகுந்த தகவல்கள்.

சூது விலகி பழைய நட்பு மலர்ந்தால் சரி!

Read previous post:
அடுத்த அரண்மனை கோப்பெருந்தேவி? விநியோகஸ்தர்கள் விரைவு…!

அண்மையில் வந்த ‘அரண்மனை’தான் கோடம்பாக்கத்தின் லேட்டஸ்ட் ரிசர்வ் பேங்க்! வெள்ளி, சனி, ஞாயிறு மூன்று நாட்கள் மட்டும் கூட்டம் கூடுவதும் திங்கட் கிழமையிலிருந்து அது தலைகுப்புற சரிவதும்தான்...

Close