அஜீத் பட ஷுட்டிங் இப்படிதான் நடக்கணும் கவுதம் முடிவால், உறக்கம் போச்சு பலருக்கு!
கொட்டாச்சி, வையாபுரி மாதிரி லப்பை சப்பைகள் வந்தாலே கூட, ஆட்டோகிராப் வாங்க ஆலாய் பறப்பார்கள் தமிழ்நாட்டில். இதில் அஜீத் விஜய் சிக்கினால் என்னாவது? ஒரு புறம் இந்த ரசிகர்கள் தொந்தரவு சந்தோஷத்தை கொடுத்தாலும், மறுபுறம் படப்பிடிப்பை கெடுக்கிறதே என்று படபடப்படைவார்கள் இயக்குனர்கள். அப்படி கவுதம் மேனன் படபடப்படைந்ததன் விளைவு சுமார் 100 பேருக்கு உறக்கம் போச்சு. எப்படி?
கடந்த சில நாட்களாக அஜீத் நடிக்கும் ஷுட்டிங் ஈசிஆர் சாலையில் நடந்து வருகிறது. பகலில் படப்பிடிப்பு நடத்தினால் அந்த சாலையின் கதி என்னாகும் என்பதை யாரும் சொல்லி தெரிய தேவையில்லை. ரசிகர்கள் அமைதி காக்கவும் என்று அஜீத்தே வந்து கூவினாலும், யார் கேட்கப் போகிறார்கள்? இப்படிதான் ஆரம்பம் படப்பிடிப்பு நேரத்தில் திடீரென உள்ளே வந்த ஒரு ரசிகர் கூட்டம், கையோடு கொண்டு வந்த குடம் பாலையும் அஜீத்தின் காரின் மீது ஊற்றி வாழ்த்திவிட்டு கிளம்பிவிட்டார்கள். வேடிக்கை என்னவென்றால், அது கார் ஷாட். இந்த பால் அப்படியே கெட்டியாக காரில் ஒட்டிக் கொள்ள, திரை போட்ட மாதிரி ஒரு ஸ்கின் டோர்ன் வந்துவிட்டதாம் காருக்கு. அதற்கப்புறம் அந்த காருக்கு கன்ட்டினியூட்டி ஷாட் வேறு.
என்னதான் செய்வார்கள் பாவம்? அதற்கப்புறம் அந்த காரை எடுத்து சென்று வாட்டர் வாஷ் செய்த பிறகுதான் ஷுட்டிங்கை தொடர முடிந்ததாம். இதையெல்லாம் தவிர்க்கதான் நள்ளிரவில் யாருக்கும் சொல்லாமல் படப்பிடிப்பை நடத்துகிறாராம் கவுதம் மேனன். அதுவும் தனது யூனிட்டை சேர்ந்தவர்களுக்கு கூட ஈசிஆரில் எந்த இடத்தில் படப்பிடிப்பு என்பதையும் கடைசி நேர தகவலாகவே சொல்கிறார்கள்.
இப்படியெல்லாம் சர்வ ஜாக்கிரதையாக இருந்தும், ராத்திரி ரெண்டு மணி மூணு மணிக்கெல்லாம் அமைதியான இரவை கிழிக்கும் விதத்தில் தலலலலலலலலலலல…..லல என்று குரல் மட்டும் வருகிறதாம். உற்று பார்த்தால்தான் அங்கொன்றும் இங்கொன்றுமாக ரசிகர்கள் தலை தெரிகிறதாம்.
உதயசூரியனை ஒளிச்சு வச்சாலும் உஷ்ணத்தை எங்க ஒளிக்க?
Thala na gethu…………………