அவரே சொல்லிட்டாரு… இனி இது எதுக்கு?

விஜய் பார்க்கதான் மூடி. பழகுனா ஜாலி! கோடம்பாக்கத்தின் யங் ஹீரோக்கள் பலரும் இப்போது விஜய்யின் நட்பு வட்டத்தில்!

‘…ங்ணா’ என்று விஜய் தனது படங்களில் அழைப்பதை போலவே, மேற்படி யங் ஹீரோக்களும் விஜய்ணா… என்கிறார்கள் அவரை. அதுவும் விஜய்யின் நட்பு வட்டத்தில் நினைத்தே பார்க்க முடியாத அப் கமிங் ஆர்ட்டிஸ்டுகளும் இருக்கிறார்கள். அடித்து பிடித்து ஹீரோ அந்தஸ்தை எட்டிப்பிடித்தவர்களும் இருக்கிறார்கள். லேட்டஸ்ட்டாக விஜய்யின் தோஸ்த் ஆகியிருக்கிறார் சிம்பு. வேடிக்கை என்னவென்றால், வீண் எண்ட் பார்ட்டிகளில் விஜய்யிடம் நெடுங்காலம் நட்பு காட்டும் ஜீவாவும் இருக்கிறார். திடீரென நுழைந்த சிம்புவும் இருக்கிறார். அதுதான் ஆச்சர்யம்.

எல்லாருமே விஜய் நடித்த படங்களை புகழ்வதும், அவரது மேனரிசங்களை போற்றுவதுமாக இருக்கிற நேரத்தில், விஜய்யும் இந்த சுமார் ஹீரோக்களை பாராட்டுவதுதான் ஆச்சர்யம். விஜய்யின் சமீபத்திய பாராட்டு ஜி.வி.பிரகாஷ்குமாருக்கு. தமிழ்சினிமா கெடுத்துக் குட்டிச்சுவராக்கிய டெக்னீஷியன்களில் மிக முக்கியமானவர் ஜி.வி.பிரகாஷ்தான். தானுண்டு, தன் அழகான இசையுண்டு என்று இருந்தவர், நடிக்கப் போகிறேன் பேர்வழி என்று சொந்த பணத்தை வாரிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். இவர் தற்போது நடித்து வரும் இரு படங்களில் ஒரு படத்திற்கு ஐம்பது லட்சத்தை கொடுத்துவிட்டுதான் நடிக்கிறார் என்றும் கூறுகிறார்கள் கோடம்பாக்கத்தில்.

சரி விஷயத்திற்கு வருவோம். சமீபத்தில் விஜய் ஜி.வி.பிரகாஷை பாராட்டியிருக்கிறார். என்னவென்று? உங்ககிட்ட பெக்யூலியரா ஏதோ ஒண்ணு இருக்கு. ஒரு மேஜிக் போல ஏதோ செய்யுறீங்க. நல்லாயிருக்கு. கீப் இட் அப் என்றாராம்.

அவரே சொல்லிட்ட பிறகு இனி ஆர்மோனிய பொட்டியை தொடுவாரா ஜிவி? கெடுத்துட்டீங்களே விஜய்….!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
”POOJAI” SONGS STILLS

Close