இவர்தான் நிக்கி கல்ராணி… இவரால்தான் ஜி.வி.பிரகாஷுக்கு டென்ஷன்?

எந்த நேரத்தில் ஆர்மோனிய பொட்டியை தள்ளி வச்சுட்டு மேக்கப் பொட்டியை தொட்டாரோ…. ஜி.வி.பிரகாஷ் நடித்த படம் எல்லாமே பாதியில நிக்குது! ‘தெரிஞ்ச தொழிலை விட்டவனும் கெட்டான்… தெரியாத தொழிலை தொட்டவனும் கெட்டான்’ என்றொரு பழமொழியை நிஜமாக்காமல் அவர் விட மாட்டார் போலிருக்கிறது என்றெல்லாம் கோடம்பாக்கத்தில் குமுறல்கள் ஒலிக்க, ‘இந்த ஊருக்கு இதே வேலதான் பாஸ். ஜெயிச்சா ஆஹாம்பானுங்க. தோத்தா போடாம்பானுங்க…’ என்று தன்னைத் தானே தட்டிக் கொடுத்துக் கொண்டு பிடிவாதமாக இருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். ஆனாலும் அவருக்குதான் பிரச்சனை எந்தெந்த ரூபத்தில் வருது?

‘பென்சில்’ படம் பாதியிலேயே நிற்கிறது. அது மீண்டும் வளருமா என்பதை குறி சொல்கிற கோடங்கியிடம்தான் கேட்கணும். அதற்கப்புறம் ஒரு படத்தில் ஹீரோவாக கமிட்டானார். அதுவும் துவக்கத்திலேயே ஸ்டாப். இப்போது ஞானவேல் ராஜா தயாரிப்பில் ‘டார்லிங்’ என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இவருக்கும் படத்தின் ஹீரோயின் நிக்கி கல்ராணிக்கும் செம ஃபைட் என்கிறார்கள். பொதுவாக ஒரு ஹீரோவும் ஹீரோயினும் திரைக்கு பின்னாலும் அவ்வளவு அன்பாக பழகுவார்கள். (வேணும்னா சிம்புகிட்ட கேளுங்க) ஏனென்றால் ஸ்கிரினில் கெமிஸ்ட்ரி தெரியணுமே? ஆனால் நடிப்புக்கு புது குழந்தையான ஜி.வி அந்த பெண்ணிடம் எடுத்த எடுப்பிலேயே தன் ஈகோவை காட்ட, ‘நானும் நியூ ஃபேஸ். நீங்களும் நியூ ஃபேஸ். உங்களை விட எனக்கு கொஞ்சம் ஜாஸ்தியாவே இருக்கும்’ என்று முறுக்கிக் கொண்டாராம் நிக்கி.

இதனாலேயே ஷூட்டிங் தடைபட, ‘ஏது… ஜி.வி.பிரகாஷின் முந்தைய படங்களுக்கு நேர்ந்ததுதான் இப்போதும் நேரும் போலிருக்கு’ என்று கதி கலங்கி போனதாம் யூனிட். இருவரையும் நேருக்கு நேர் உட்கார வைத்து பஞ்சாயத்து நடத்தி பசை தடவி ஒட்ட வைத்திருக்கிறார்கள். வண்டி பஞ்சராகாமல் ஊர் போய் சேர்ந்தால் போதும் என்கிற கலக்கத்திலிருக்கிறார்களாம் அத்தனை பேரும்!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
“காதலுக்கு கண்ணில்லை”

ஜெய் பாலாஜி மூவி மேக்கர்ஸ் வழங்கும்  ஜெய் ஆகாஷ் இயக்கத்தில் உண்மை கதை “காதலுக்கு கண்ணில்லை “எனும் புதிய திரைப்படத்தை தயாரித்து , திரையிட தயார் நிலையில் உள்ளது இப்படத்தின்...

Close