வெள்ளத்துல கார்கள் போச்சே! ஜிவி.பிரகாஷ், ஹாரிஸ் கவலை!

போட்டு போட்டு புரட்டியெடுத்த வெள்ளம், பங்களாவாசிகளையும் கூட விட்டு வைக்கவில்லை. ஏழைக்கு ஈராயிரத்து சொச்சம் என்றால், பணக்காரர்களுக்கு பல லட்சங்கள் லாஸ். சிலருக்கு கோடிகளை தாண்டியும் நஷ்டம். கண்ணீரை அடக்கிக் கொண்டு, “கஷ்டம் எல்லாருக்கும்தானே?” என்று மனதை சமாதானப்படுத்திக் கொள்கிறவர்கள் ஓ.கே. ஆனால் எழவே முடியாமல் போனவர்கள்தான் ஏராளம் ஏராளம்.

நாடு முழுக்க நஷ்டக் கணக்கா இருக்கும் போது, நாம எங்கய்யா போய் புலம்பறது? என்று கர்சீப்பால் வாயை அடைத்துக் கொண்டு விசும்புகிறார்களாம் ஜி.வியும் ஹாரிசும். ஏன்? இவர்கள் இருவருமே கார் பிரியர்கள். ஒரு காரோடு திருப்தியடையாமல் நான்கு அல்லது அதற்கு மேலும் என்று ஆசைப்பட்டவர்கள். அதனால்தான் இப்போது கண்ணீர். ஜி.வி.பிரகாஷின் விலை உயர்ந்த நான்கு கார்கள் முழுவதுமாக மூழ்கி ஒன்றுக்கும் உதவாமல் போய்விட்டதாம். இன்ஷியூரன்ஸ் நிறுவனங்கள்தான் பேரதிர்ச்சியில் இருக்கிறதே… ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கார்களுக்கு சேதம் என்றால், அவர்களும் என்ன செய்வார்கள்? முடிந்தவரை கொடுத்துவிட்டு மிச்சத்தை ஏப்பம் விட பார்க்கிறதாம் அவை!

இன்ஷியூரன்சும் முறையாக பெற முடியாமல் தவித்து வரும் இருவருக்கும் இந்த கார் போன வகையிலேயே சில கோடிகள் வரைக்கும் லாஸ் ஆகும் என்கிறது தகவல்கள். ஜிவிக்கு நான்கு கார்கள். ஹாரிசுக்கு இரண்டு கார்கள். வெளியே சொல்ல முடியாமல் வேதனைப்படும் இவர்களை போல எத்தனை சினிமா பிரபலங்களோ, யார் கண்டது?

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
அட்லிக்கு விஜய் தந்த கிறிஸ்துமஸ் பரிசு! ஆஹா ஓஹோ அடடே!

“அவரே வந்துட்டாரே...” என்று அசந்து போன அட்லீக்கு அடுத்தடுத்து சர்ப்ரைஸ் கொடுத்து அதிர வைத்துவிட்டார் விஜய். பொதுவாக பண்டிகை நாட்களில் ராஜா அரச மண்டபத்துலேயே இருப்பார். சேவகர்களும்...

Close