அதுக்கு நான் ரெடி இல்ல! ஹன்சிகா பதிலால் ஜி.வி.பிரகாஷ் அதிர்ச்சி?

சிகரெட் புகைக்கும் சாம்பிராணி புகைக்கும் இருக்கிற வித்தியாசத்தை இந்நேரம் புரிந்து கொண்டிருப்பார் ஜி.வி.பிரகாஷ். த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா படம் இன்னும் கொடி நீட்டி கொய்யாப்பழம் பறித்துக் கொண்டிருக்கிறது. அந்தளவுக்கு கலெக்ஷனோ கலெக்ஷன்! நாக்கை சப்புக் கொண்டிக் கொண்டு, ஜி.வியை அணுகும் சில தயாரிப்பாளர்கள் இன்னும் இதே போல ஆறேழு படம் எடுத்து, கோடி கோடியாக அள்விவிட வேண்டும் என்று கிளம்பிவிட்டார்கள். இவர்கள் கையோடு அழைத்து வரும் புது இயக்குனர்களும், “சார்… நீங்க அப்படியே பால் பாக்கெட்டை பிதுக்குன மாதிரி…” என்று ஆரம்பிக்கும்போதே, “ஐயா சாமீய்… நானும் நல்ல குடும்பத்து பையன்தான். இப்படி ஒரேயடியா கழுத்துல காமக் கொடூரன் டாலரை மாட்டி விட்டுறாதீங்க” என்று கெஞ்சவே ஆரம்பித்துவிட்டார் ஜி.வி.

இது ஒருபுறமிருக்க, ஜிவிக்கு ஜோடியாக நடிக்கவே கூடாது என்று முடிவெடுத்திருக்கிறார்களாம் முன்னணி ஹீரோயின்கள் சிலர். நயன்தாரா இவரை மறுத்தது மாதிரி எல்லாரும் சொல்லி வைத்தது போல மறுப்பதுதான் அவருக்கும் டவுட் கிளம்பியிருக்கிறது. அவர் தற்போது நடிக்கவிருக்கும் அடுத்த படமான புரூஸ்லீ படத்திற்கு அவரே நேரடியாக ஹன்சிகா மோத்வானியிடம் பேசினாராம்.

“நயன்தாராவுக்கு தர்றதா சொன்ன அதே ரெண்டரை கோடியை உங்களுக்கு தர்றேன். ரெடியா?” என்று ஜி.வி.கேட்க, “இன்னும் நாலு வருஷத்துக்கு நான் பிஸி” என்று தப்பித்து தலை மறைவானாராம் அவர். இதனால் படுபயங்கர அப்செட்டில் இருக்கிறார் ஜி.வி.

“நான் வெறும் புளியோதரை இல்ல… பிரசாதமாக்கும்” என்று காட்டுவதற்காகவாவது ஒரு நல்ல படத்தில் நடிக்கத் துடிக்கிறார் ஜி.வி. உலகம் நம்புனாதானே?

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
புலி படத்தின் அதிகாலை ஸ்பெஷல் காட்சிகள் ரத்து?

டாப் ஹீரோக்கள் யார், யார்? இந்த கேள்விக்கு விடை தெரிய வேண்டும் என்றால் அதிக சிரமம் தேவையில்லை. யார் படத்தை காண நள்ளிரவு பனிரெண்டு மணியிலிருந்தே க்யூவில்...

Close