ஜி.வி.பிரகாஷ் ஒரு ஐட்டம்! கூட்டத்தை சிரிக்க வைத்த பார்த்திபன்

‘த்ரிஷா இல்லேன்னா நயன்தாராதான் எனக்கு ஜோடி’ என்று சாய்ஸ் வைத்து செலக்ட் பண்ணுகிற நிலைமையில் இல்லை ஜி.வி.பிரகாஷ். ஆனால் அப்படியொரு நிலைமை வந்துருமோ என்று தோன்ற வைத்தது ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடித்த ‘த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா’ படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள். இன்று சத்யம் வளாகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் ஏர்.ஆர்.முருகதாஸ், பார்த்திபன், தாணு உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் வாழ்த்தினார்கள்.

என்னப்பா… என்னவோன்னு நினைச்சோம். தம்பி இந்த போடு போடுதே… என்று விழாவுக்கு வந்திருந்த அத்தனை பேரும் முணுமுணுக்கிற அளவுக்கு ஆட்டத்தில் மினி பிரபுதேவா ஆகியிருந்தார் ஜி.வி.பிரகாஷ். வுழுந்து புரண்டு அவர் ஆடிய அந்த ஆட்டத்தில், நசுங்கியது….. நசுக்கப்பட்டதெல்லாம் ஒரு சில ஐட்டம் கேர்ள்ஸ் மற்றும் கதாநாயகி மணிஷா. இதையெல்லாம் காதில் புகைவிட்டாரோ என்னவோ, ஒரு கதையோடு தனது வாழ்த்துரையை ஆரம்பித்தார் பார்த்திபன்.

ஒரு ஊர்ல ஒரு பேசுற கிளி இருந்துச்சு. அதை விற்க முடிவெடுத்தான் கிளிக்கு சொந்தக்காரன். பேசுகிற கிளி என்றதும் அதை வாங்க ஒரு பெண் வந்தாள். என்னை பார்த்தா உனக்கு என்ன தோணுது என்று அவள் கேட்க, ஐட்டம்னு தோணுது என்றது கிளி. அவ்வளவுதான். செம கோவம் வந்துருச்சு அந்த பெண்ணுக்கு. நல்லவேளையாக கிளிக்காரன், அப்படியெல்லாம் பேசக்கூடாது. பொய் சொல்லணும் என்றெல்லாம் சொல்லிக் கொடுத்து மீண்டும் அவளிடம் அனுப்பினாள். இப்போ அவள் கேட்டாள்.

ராத்திரி என் வீட்டுக்கு ஒரு ஆம்பிளை வந்தா என்ன நினைப்பே? அதற்கு கிளி சொன்னது உன் புருஷன்னு நினைப்பேன். சரி… அவனுடன் இன்னொரு ஆம்பிளை வந்தா? உன் புருஷனோட தம்பின்னு நினைப்பேன் என்றது. அந்த பெண்ணுக்கு பயங்கர மகிழ்ச்சி. இருந்தாலும் விடாமல் இன்னொருத்தனும் அவங்க கூட வந்தா என்ன நினைப்பே? என்றாள். இப்போ கிளி அவளுக்கு பதில் சொல்வதை விட்டுட்டு கிளியை வளர்த்தானே… அவனிடம், ‘பார்த்தியா. நான் அப்பவே சொன்னேன்ல? இவ ஒரு ஐட்டம்னு’ என்றது.

இந்த கதையை பார்த்திபன் சொல்லி முடிக்க, அரங்கத்தில் பலத்த கைத்தட்டல். அந்த சப்தம் முடிவதற்குள் பார்த்திபன் சொன்னதுதான் இன்னும் இன்னும் சிரிப்பலையை ஏற்படுத்தியது. ஜிவி.பிரகாஷ் நன்றாக இசைமைக்கிறார். நன்றாக ஆடுகிறார். நன்றாக நடிக்கிறார். இப்படி பல ஐட்டங்களை அவர் உள்ளடக்கியிருப்பதால், அவரும் ஒரு ஐட்டம் என்றார்!

பார்த்திபன் பேசிய பின்பு யார் பேசி எடுபடும்? விழாவே கலகலப்போடு கலைந்தது.

Trailer Link : https://youtu.be/LgGriiQ5u3w

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
பேபி- விமர்சனம்

‘தாயும் சேயும் நலம்’ என்று பழகிய வார்த்தையை கூட ‘தாயும் பேயும் நலம்’ என்று மாற்றிவிடும் போலிருக்கிறது இந்த பேபி! ஏனென்றால் கதை அப்படி! பிறந்த குழந்தையை...

Close