ஜி.வி.பிரகாஷுக்கு ரஜினி பட தலைப்பு வேணுமாம்ல? கதவை அறைந்து சாத்திய கம்பெனி!
அணிலுக்கு எதுக்கு யானை சைஸ் காது? இந்த லாஜிக்கை புரிந்து கொள்ளாமல்தான் ஜாம்பவான்கள் நடித்த டைட்டில்களை எல்லாம் பிடிவாதமாக வாங்கி சுள்ளான்கள் சுளுக்கெடுத்துக் வைக்கிறார்கள். பாயும் புலி என்றால் அது ரஜினிதான். ஆனால் அந்த தலைப்பை விஷால் நடிக்கும் படத்திற்கு வைத்து எவ்வளவுதான் பெரிய ஹிட் கொடுத்தாலும் மனம் ஒப்புமா? விஷாலாவது பரவாயில்லை. ஆக்ஷன் ஹீரோ என்பதை பலமுறை நிரூபித்திருக்கிறார். இந்த ஜி.வி.பிரகாஷ்குமாருக்கு என்ன கேடாம்?
இவர் நடிக்கும் ஒரு புதிய படத்திற்கு ‘பாட்ஷா என்கிற ஆட்டனி’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இதற்கு நிச்சயம் ரஜினியிடமோ, அல்லது பாட்ஷாவை தயாரித்த சத்யா மூவிஸ் நிறுவனத்திடமோ நோ அப்ஜக்ஷன் சர்டிபிகேட் வாங்க வேண்டும். எவ்வளவு தைரியம் பாருங்கள்… அதற்கும் முயற்சித்தார்களாம். சத்யா மூவிஸ் கம்பெனிக்கு இப்படியொரு வேண்டுகோளோடு போனவர்களை கோலெடுத்து விரட்டாத குறை. ‘நோ பேச்சு வார்த்தை’ என்று ஒரேயடியாக கதவை சாத்திவிட்டார்கள்.
யானைய கட்டிக்கணும்னு ஆசையிருக்கு. ஆனால் தாலி கட்டுற கை எறும்பு சைசுக்கு இல்ல இருக்கு?