நரிக்குறவர்களின் வாழ்க்கையை சொல்லும் நாடோடிகள்!

நரிக்குறவர்களின் வாழ்க்கை மிகவும் சுவாரஸ்யமானது. ஊர் ஊராக சென்று பாசி மணி ஊசி மணி விற்று வந்த அவர்களின் இன்றைய வாழ்க்கை என்னவாக இருக்கிறது? ஒரு குழுவாகவே இன்றளவும் செயல்பட்டு வரும் நரிக்குறவர்களின் தேவை என்ன? அது பற்றிய விரிவான அலசல் திரைப்படங்களில் அதிகம் சொல்லப்படவில்லை. குறத்தி மகன் என்ற படம் வந்து பல வருடங்கள் ஆகிவிட்டது. அதற்கப்புறம் நரிக்குறவர்களின் வாழ்க்கை முறையே முற்றிலும் மாறிவிட்டது. அவர்களின் கலாச்சாரம், வரலாறு, பண்பாடு, பாரம்பரியம், மொழி, கலை, தொழில் எல்லாமே வேறு தளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் நரிக்குறவர்கள் பற்றிய ஆவணப்படம் ஒன்று உருவாகியிருக்கிறது. இது வருங்கால சந்ததியினர் அவர்களை பற்றி அறிந்து கொள்ள முக்கியமான ஒரு பொக்கிஷமாக இருக்கும்.

இந்த சிறப்பான முயற்சியில் இறங்கியிருப்பவர் ஒரு பத்திரிகையாளர். திருவாரூரில் பிறந்த சிவ சித்திரைச்செல்வன்தான் அவர். சென்னை ஓவியக்கல்லூரியில் முதுகலை பட்டம் பெற்றவர். ஆனந்த விகடன் இதழில் மாணவ பத்திரிகையாளராகவும் பணியாற்றியிருக்கிறார். விளம்பர பட இயக்குனர் ஜே.டிஜெர்ரியிடம் உதவி இயக்குனராகவும், எஸ்.ஆர்.கதிரிடம் உதவி ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியிருக்கிறார்.

விரைவில் முழுநீள படம் எடுக்க தயாராகிக் கொண்டிருக்கும் இவரது நாடோடிகள் என்ற இந்த ஆவணப்படம் திரையிடல் மற்றும் அது குறித்த விவாத நிகழ்ச்சி எதிர்வரும் 11 ந் தேதி ரஷ்ய பண்பாட்டு மையத்தில் நடைபெற இருக்கிறது. நேரில் சென்று படத்தை பார்த்து வாழ்த்தி விட்டுதான் வாருங்களேன்.

இணைப்பு- நிகழ்ச்சியின் அழைப்பிதழ்.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
ஐயோ… இவரோட அட்ராசிடி தாங்கலையே?

செங்கல்லை ஒன்றோடு ஒன்று தேய்த்த மாதிரியான குரல்! அதுதான் இன்று துட்டு மேல் துட்டாக அறுவடை செய்யும் வயல்! திரையில் இவர் வந்தாலே ஆஹா ஓஹோவாகிறது தியேட்டர்....

Close