ஹன்சிகாவை அழ வைத்த ஆர்யா சினிமாவுல இதெல்லாம் சகஜமப்பா!

மீகாமன் பிரஸ்மீட்!

‘ஹன்சிகா அழுதுட்டாரு தெரியும்ல… ’ என்று அப்படத்தின் இயக்குனர் மகிழ்திருமேனி கூறியதில் ஏதும் உள் குத்தோ, பப்ளிசிட்டி ஸ்டன்ட்டோ இருப்பதாக தெரியவேயில்லை. அப்புறமென்ன? பொச பொசவென பிடித்துக் கொண்டது மீடியா. ‘இல்லைங்க… அத விட்ருங்க. வேற பேசுவோம்’ என்றெல்லாம் அவர் சமாதானப்படுத்தினாலும், விடுவதாக இல்லை ஒருவரும்.

பக்கத்திலிருந்த ஆர்யா அந்த ரகசியத்தை அவிழ்த்தார். ஒண்ணுமில்லங்க. நானும் அவங்களும் நெருக்கமா நடிக்க வேண்டிய சீன். வழக்கத்தை விட கொஞ்சம் மீறி நடிக்க வேண்டியதா இருந்திச்சு. என்னோட இமேஜ் ஸ்பாயில் ஆயிடும்னு மறுத்துட்டாங்க. இருந்தாலும் வற்புறுத்தி நடிக்க வச்சுட்டோம். ஆனால் நடிக்கும் போது தெரியாது, அது எப்படி படமாகுதுன்னு? ஒரு கவிதை மாதிரிதான் அந்த ஷாட் எடுக்கப்பட்டிருக்கு. அது அவங்களுக்கு தெரியாமல் ஷாட் முடிஞ்சதும் அழ ஆரம்பிச்சிட்டாங்க என்றார். ஏக தாராளமான ஹன்சிகாவே அழுகிறார் என்றால் அந்த காட்சி எப்படி எடுக்கப்பட்டிருக்கும்? ஆர்யா காட்டுல ஒரே சந்தன மரம்தான்ப்பா… என்று சக ஹீரோக்கள் அவர் மீது பொறமைப்படுகிற அளவுக்கு அந்த கட்டிப்பிடி சீன் இருந்திருக்கலாம் என்பதுதான் நமது யூகம்.

ஷுட்டிங் சென்னையில எங்க இருந்தாலும், வீட்லேர்ந்து சைக்கிள்ளேயே வந்துடுவாரு ஆர்யா. பலமுறை வேணாம்னு சொல்லியும் அப்படிதான் வருவார். ஏன்னா உடம்பை ஃபிட்டா வச்சுக்கிற விஷயத்துல அப்படியிருக்காருன்னு சொல்ல வந்தேன் என்றார் மகிழ் திருமேனி. மீண்டும் ஆர்யாவை துளைத்தெடுத்த பிரஸ், நீங்கதான் ஹன்சிகாவை ரெகமண்ட் பண்ணினீங்களா என்று கேட்க, சத்திய இல்லீங்க. நான் ஏதாவது மும்பை பொண்ணுங்களை நடிக்க வைங்க. நான் வேணும்னா அவங்களுக்கு தமிழ் கத்துத் தர்றேன்னு சொன்னேன். தயாரிப்பாளர்தான் விடாமல் பிடிவாதமா ஹன்சிகா நடிக்கணும்னு சொல்லிட்டார். வேற வழி…? என்றார் பரிதாபமாக.

அப்படின்னா அந்த நெருக்கிப்பிடி, கட்டிப்பிடி காட்சியில் ஆர்யாவுக்கும் சம்மதம் இல்லையோ?

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
கத்திக்கு வந்த புது நெருக்கடி அட… இது எப்பலேர்ந்து?

நாளுக்கு நாள் நெருக்கடிதான் கத்திக்கு! ஒரு புறம் ஒவ்வொரு முடிச்சாக அவிழ்த்துக் கொண்டிருக்கிறார் அப்படத்தின் டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ். இன்னொருபுறம் புதுப்புது முடிச்சாக விழுந்து கொண்டேயிருக்கிறது. லேட்டஸ்ட் சிக்கல்...

Close