குஷ்புவுடன் கூட்டு? படம் தயாரிக்கிறாரா ஹன்சிகா?
ரெஸ்ட்லிங், குங்ஃபூவெல்லாம் கற்றுக் கொண்டு வந்தால்தான் இனி படம் தயாரிக்க முடியும் போலிருக்கிறது. போட்டியும் பொறாமையும் அடிதடியும் நிறைந்தோங்கி நிற்கும் இந்த திரையுலகத்தில் நண்டுகள் மாதிரி மாற்றி மாற்றி கால்களை இழுத்துவிடுகிற கொடுமைகள்தான் அதிகம். இந்த பொல்லாத காலத்திலும், படம் தயாரிக்க வரும் நடிகைகளை பாராட்டிதான் ஆக வேண்டும். நடிகை சோனாவின் உண்டியலை சுத்தமாக வழித்தெறிந்த சந்தர்ப்பவாதிகள் பற்றியெல்லாம் ஹன்சிகா அறிந்திருக்க வாய்ப்பில்லை. அவரும் படம் தயாரிக்கும் முயற்சியில் இறங்கியிருப்பதாக நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நல்லவேளை… அவர் நேரடியாக களம் இறங்கி புஜம் பெயர்த்துக் கொள்ளவில்லை. அக்கா… என்று ஆசை ஆசையாக அவர் நம்பும் குஷ்புவிடம் பார்ட்டனராக சேர்ந்திருக்கிறாராம். காதும் காதும் வைத்தாற் போல நடந்திருக்கும் இந்த இணைப்பு, இன்னும் பல படங்களை தயாரிக்க உதவினால் சந்தோஷமே.
ஹன்சிகாவை சின்ன குஷ்பு என்றும், குஷ்புவை பெரிய ஹன்சிகா என்றும் அழைக்கும் கோடம்பாக்கம் இனி அவர்களை பார்ட்னர்ஸ் என்று அழைக்கக் கூடும். பார்ட்னர்சின் புது பிசினஸ் வெற்றிகரமாக நடக்க வாழ்த்துக்கள்.