மீகாமன் பட இயக்குனர் மீது ஹன்சிகா அம்மா கடும் கோபம்?
வெள்ளி கிண்ணத்துல வெண்ணைய வச்ச மாதிரிதான் நடிகைகளை தாங்கி பிடிப்பார்கள் இயக்குனர்கள். ஏன்? ஏன்னா… அப்படிதான் அது!
ஹீரோ ஹீரோயின்களை கம்ஃபர்ட்டாக வச்சுக்கணும் என்பது சினிமாவுலகத்தின் அறிவிக்கப்படாத பாலிஸி என்பதால், பல இயக்குனர்கள் அவர்களை முகம் சுளிக்க விட மாட்டார்கள். அவர்கள் சின்னதாக கவலைப்பட்டாலும் பெரிய ஸ்கிரீனில் அது வெளிப்பட்டு விடும் என்கிற அச்சம் காரணமாகவும் இருக்கலாம். இந்த நிலையில்தான் ‘மீகாமன்’ பட இயக்குனர் மகிழ் திருமேனி செய்திருக்கும் ஒரு காரியத்தால் மனம் வெதும்பி இருக்கிறார் ஹன்சிகா. அவராவது பரவாயில்லை. அவரது அம்மா, மகிழ் மீது கடும் எரிச்சலில் இருக்கிறாராம். ‘படம் முடியட்டும்… திரும்ப வருவீங்கல்ல. அப்ப வச்சுக்கிறேன்’ என்கிற அளவுக்கு அந்த எரிச்சல் எல்லை மீறியிருக்கிறதாம்.
ஏனிந்த எரிச்சல்? கடந்த சில தினங்களுக்கு முன் கோவாவில் மீகாமன் ஷுட்டிங் நடந்து கொண்டிருந்தது. என்ன காரணத்தாலோ வந்ததிலிருந்தே அசிரத்தையாக இருந்தாராம் ஹன்சிகா. சொன்ன நேரத்தில் ஷாட்டுக்கு வருவதில்லை. இது நொள்ளை, அது நொட்டை என்று ஏதாவது காரணம் சொல்லிக் கொண்டேயிருந்தாராம். நடிகைகளின் பந்தாவுக்கு கால் அமுக்கி விடுகிற வேலையை எல்லா இயக்குனர்களும் பார்ப்பதில்லை அல்லவா? பொறுத்து பொறுத்தே படம் எடுத்துக் கொண்டிருந்தாராம் மகிழ் திருமேனி.
கடைசியில் வந்தது அந்த ஷாட். கடற்கரை மணலில் குறைந்த அளவுள்ள ஆடையுடன் ஹன்சிகா படுத்துக்கிடப்பது போன்ற காட்சி. மொட்டை வெயிலில் வெற்று உடம்புடன் படுக்க விட்டுவிட்டார் அவரை. மானிட்டர் பார்க்கணும், ஷாட் சரியா வரல, இன்னும் ஒரு லொக்கேஷன் சேஞ்ச் என்று ஹன்சிகாவை சுடு மணலில் போட்டு பலமுறை புரட்டி எடுத்துவிட்டாராம். ‘ஐயோ… என் பொண்ணை இப்படி போட்டு பிறாண்டுறாரே… அவரெல்லாம் நல்லாயிருப்பாரா?’ என்று வெம்பி வெம்பி தணிந்தாராம் வெளியே நின்று கொண்டிருந்த ஹன்சிகாவின் மம்மி.
ஒரு வழியாக ஷாட் முடிந்ததும் அழுகையும் ஆத்திரமுமாக ஓட்டல் அறைக்குள் ஓடினார் ஹன்சிகா என்கிறது படப்பிடிப்பு தகவல்கள்.