முரட்டுக்குத்து! திணறவிட்ட ஞானவேல்ராஜா!

ஊரே அசிங்கம், கேவலம் என்று காறித்துப்பிக் கொண்டிருந்தாலும், கல்லா நிரம்பியதில் ஃபுல் மகிழ்ச்சி ஹரஹரமஹாதேவகி டீமுக்கு! எப்படியொரு தொலை நோக்கு சிந்தனை இருந்திருந்தால் “இதே டீமுடன் இணைந்து நாங்கள் மீண்டும் வருவோம்” என்று மஹாதேவகி ரிலீசுக்கு முன்பே சொல்லியிருப்பார் ஞானவேல்ராஜா? இருட்டறையில் முரட்டுக் குத்து என்று பெயரிடப்பட்ட அந்தப்படம் தடபுடலாக துவங்கப்பட்டுவிட்டது.

அடுத்த பஜனை ஆரம்பம் என்று ஓப்பனிங்கிலேயே ஓவராக போயிருக்கும் இந்தப்படத்தின் டிசைன், சோஷியல் மீடியாக்களில் வறுபட்டுக் கொண்டிருப்பது இருக்கட்டும்….

கேட்காமலேயே மனம் நிறைய அருளியிருக்கிறார் ஞானவேல்ராஜா. படத்தின் இயக்குனர் சந்தோஷ் பி. ஜெயக்குமார் முதல் படத்திற்கு வாங்கிய சம்பளம் 12 லட்சம். இந்த புதிய படத்திற்கு அப்படியே இரு மடங்கு சம்பளத்தை வழங்கிவிட்டாராம். அப்படியே முதல் படத்தில் பங்காற்றிய எல்லாருக்கும் டபுள் சம்பளம் என்று கூறி கமிட் பண்ணியும் இருக்கிறார்.

கவுதம் கார்த்திக் நடித்த படத்திலேயே முதல் ஹிட் படம் இதுதான் என்பதால், அவருக்கு கோடியை நெருங்கிய சம்பளமும் வழங்கப்பட்டுள்ளது.

இப்படியே கூடி ஏத்திவிடுங்க… அப்புறம் அடிவயிறு நோகுது… நுனி இலை காயுதுன்னு கதறுங்க…!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
பிக்பாஸ் சீசன் 2 சூர்யாவும் இல்லை, விஜய்யும் இல்லை! பின்னே வேற யாரு?

Close