நான் சென்னை பொண்ணு… தீபிகா படுகோன் பேச்சால் சென்னை குளுகுளு…

பாஞ்சாலிக்கு புடவை தந்த கிருஷ்ணரை விட தீபிகாவுக்கு புடவை தந்த பாலம் சில்க்ஸ் ஸ்பெஷல்தான் போலிருக்கிறது. இல்லையென்றால் சென்னை சில்க்ஸ் படத்தில் நடித்த போது தனக்கு காஸ்ட்யூம் தந்த பாலம் சில்க்ஸ் நிறுவனத்தின் விழாவுக்கு விழுந்தடித்துக் கொண்டு ஓடிவருவாரா தீபிகா?

கடந்த ஆண்டு ஷாருக், தீபிகா நடிப்பில் வெளியான சென்னை எக்ஸ்பிரஸ் திரைப்படத்தில் தீபிகா அணிந்து நடித்த சேலைகள் ஸ்ரீபாலம் சில்க்ஸ் நிறுவனத்தின் கைவண்ணமே. அதன் தொடர்ச்சியாக அதே வெற்றி ஜோடியான ஷாருக் – தீபிகா இணைந்து நடித்து இந்த தீபாவளி பண்டிகைக்கு திரைக்கு வரவுள்ள ஹேப்பி நியூ இயர் திரைப்படத்தின் அதிகாரபூர்வ டிரைலர் வெளியீட்டு விழாவும் ஸ்ரீபாலம் சில்க் நிறுவனத்தின் சில்க் லைன் விழாவில் நடைபெற்றது. ஷாருக், தீபிகா மட்டுமல்லாது ஹேப்பி நியூ இயர் திரைப்படத்தில் நடித்த முக்கிய நடிகர்கள் பலரும் பங்கேற்றனர்.

விழாகுறித்து பேசிய நடிகை தீபிகா படுகோன், “என்னுடைய சிறுவயதில் கொஞ்சகாலம் சென்னையில் வசித்ததை இப்போது நினைவுகூர்கிறேன். சென்னை மக்களின் அன்பும், கனிவும் என்னை மிகவும் கவர்ந்த ஒன்று. கடந்த ஆண்டு நடைபெற்ற சென்னை எக்ஸ்பிரஸ் விழாவை அடுத்து மீண்டும் இம்முறை சென்னைக்கு வருவதை பெருமையாக கருதுகிறேன்” என்றார்.

விழாவின் சிறப்பம்சங்களில் ஒன்றாக ஹேப்பி நியூ இயர் திரைப்படத்தின் போஸ்டர் பதிக்கப்பட்ட பட்டுப் புடவையை பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் அறிமுகப்படுத்தினார். அப்போது பேசிய அவர், மிக மிக திறமை வாய்ந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் தமிழ் திரையுலகில் இருப்பதாக பெருமிதம் தெரிவித்தார். இயக்குனர் மணிரத்னம், ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரன், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோருடன் இணைந்து பணிபுரிவது பேரானந்தம் என்றும் ஷாருக் குறிப்பிட்டார்.

இதுகுறித்து பேசிய ஸ்ரீபாலம் சில்க்ஸ் நிறுவனர் திருமதி. ஜெயஸ்ரீ ரவி, வண்ணங்களின் திருவிழாவான தீபாவளி பண்டிகைக்காகவும், நட்சத்திரங்களின் கலவையான ஹேப்பி நியூ இயர் திரைப்படத்திற்காகவும் ஸ்ரீபாலம் சில்க்ஸ் காத்துக் கொண்டிருக்கிறது. ஒட்டுமொத்த படக்குழுவினரும் எங்களது ஸ்ரீபாலம் சில்க்சின் சில்க்லைன் விழாவில் பங்கேற்றது எங்களுக்கு மிகுந்த பெருமை அளிக்கிறது என்றார்.

சில்க் லைன் திருவிழாவின் ஒருபகுதியாக தீபாவளி பண்டிகைக்காக ஸ்ரீபாலம் சில்க்ஸ் அறிமுகப்படுத்தி உள்ள பட்டுப் புடவைகளான பாலம் ஸ்வர்ல்ஸ், பாலம் ஹ்யூஸ், அங்காரிகா பட்டு, ஆபணரப்பட்டு இவற்றுக்கு எல்லாம் சிகரம் வைத்தாற்போல் இளம்பெண்களை வெகுவாக கவர்ந்த கார்ப்பரேட் பட்டு ஆகியவையும் விழாவில் அறிமுகப்படுத்தப்பட்டன. வண்ண பட்டாடைகளை உடுத்தி வலம் வந்த மாடல் மங்கைகளின் அணிவகுப்பு, தங்க கிரீடத்தில் வைரக்கல் பதித்தது போல் ஸ்ரீபாலம் சில்க்ஸ் நிறுவனத்தின் சில்க் லைன் விழாவுக்க கூடுதல் பெருமை சேர்த்தது.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
Deepika Padukone and Shah Rukh Khan in chennai

Close