கடுப்படித்த ஹரி கலங்கிய ஸ்ருதி
இங்கே ஆக்ஷன் ஹீரோக்கள் இருப்பது போலவே ஆக்ஷன் இயக்குனர்களும் இருக்கிறார்கள். வெந்நீர்ல போட்ட விலாங்கு மீன் மாதிரி எந்நேரமும் துடிதுடிப்பும் கடுகடுப்புமாகவே இருக்கும் இவர்களிடம் பணியாற்றும் ஹீரோக்களே அன்றாடம் ஸ்கூல் வார்டனிடம் சிக்கிய மாணவன் போல அவஸ்தைப்படுவது சாதாரணத்திலும் சாதாரண விஷயம். அப்படியொரு கடுப்பு ராசாவாக திகழ்கிற இயக்குனர்களில் முதன்மையானவர் ஹரி.
குறித்த நேரத்தில் ஷட்டிங்குக்கு வராவிட்டால், நிற்க வைத்து கேள்வி கேட்பார் அவர். பாலாவிடம் எப்படி அடங்கிப் போகிறார்களோ, அப்படி ஹரியிடமும் அடங்கி ஒடுங்கி நடித்துவிட்டு ஷுட்டிங் முடிகிற நாளில் ‘விட்டாச்சு லீவு… கொண்டாட கண்டு பிடித்து கொண்டா ஒரு தீவு’ என்று சிறகு விரித்து சிட்டாய் பறப்பார்கள் இவர் படத்தின் ஹீரோக்கள். சரி, மேட்டருக்கு வருவோம்.
இவர் தற்போது எடுக்கவிருக்கும் பூஜை படத்தின் ஸ்டில் செஷன் சென்னையில் நடந்தது. ஹாயாக வந்த படத்தின் நாயகி ஸ்ருதிஹாசன், போட்டோ எடுத்துவிட்டு உட்காருகிற நேரமெல்லாம் தனது செல்போனில் என்னத்தையோ செய்து கொண்டிருந்தாராம். கவனித்துக் கொண்டேயிருந்த ஹரி, இங்க பாருங்க ஸ்ருதி. மற்றவங்க படத்துல எப்படியோ? என் படம் நடக்கிற இடத்துக்கு வந்துட்டா, முழு கவனமும் நான் என்ன சொல்றேன்னு கேட்கறதுல இருக்கணும். இந்த செல்போன்ல மெசேஜ் அனுப்புறது. மணிக்கணக்குல பேசிகிட்டேயிருக்கிறது. இதெல்லாம் எனக்கு புடிக்கவே பிடிக்காது என்று கடுப்புடன் கூற, அதிர்ந்து போன ஸ்ருதி அப்செட்டோ அப்செட்.
அதற்கப்புறம் விஷால் வந்து சமாதானப்படுத்தினாராம் ஸ்ருதியை. ஏற்கனவே ஹரியிடம் அனுபவ பட்டவராச்சே? கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துச் சொல்லி, அவரை நார்மலுக்கு கொண்டு வந்தாராம். இனி ஷுட்டிங் ஸ்பாட்டுக்கு செல்போன் எடுத்து வரக் கூடாது. வந்தாலும் ஆன் பண்ணக் கூடாது என்று ஸ்ருதிக்கு கட்டளையிடப்பட்டுள்ளதாம்.
கமல் பொண்ணுக்கே கண்டிஷனா?