என்னது… ஹாரிஸ் ஜெயராஜும் ஹீரோவாயிட்டாரா? கோடம்பாக்கத்தில் கொந்தளிக்கும் புரளி!
கடந்த சில தினங்களாகவே பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலை தளங்களில் ஒரு நியூஸ். ஹாரிஸ் ஜெயராஜ் ஹீரோவாகிறார் என்பதுதான் அது.
யார் யாரோ நடிக்கிறாங்க, அவர் நடிச்சா என்னவாம்? என்று அவரது ட்யூனில் மயங்கியவர்கள் ஆதரவு தெரிவித்தாலும், ‘அவ்வளவு வெயிலா அடிக்குது வெளியில?’ என்று கூடவே நக்கலடிக்கவும் ஒரு கோஷ்டி இருக்கிறார்களே? இந்த புகைச்சல் நேரத்தில் தனது பங்குக்கு இது பற்றி ட்விட்டரில் புதுக்குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார் ஹாரிஸ். அதில் முதன்முதலாக தான் கேமிராவுக்கு முன்னால் நிற்கப்போவதாகவும், ரசிகர்கள் தனக்கு ஆதரவு தருவார்கள் என்று நம்புவதாகவும் அவர் கூறியிருப்பதை படிப்பவர்கள் அதை சினிமா என்றே நினைத்தும் விட்டார்கள்.
அப்படின்னா அது சினிமா இல்லையா?
மண்ணாங்கட்டி. சேலம் மகேந்திரா காலேஜ் இவரை தனது காலேஜின் பிராண்ட் அம்பாசிடராக்கியிருக்கிறது. இதற்காக ஒரு ஸ்பெஷல் விளம்பர படத்தை எடுக்கப் போகிறார்கள். இது குறித்துதான் தனது ட்விட்டரில் எழுதி வருகிறார் ஹாரிஸ். இது புரியாமல் அவர் சினிமா ஹீரோ ஆகிவிட்டதாக ஒரு கும்பல் புரளியை கிளப்பிவிட்டிருக்கிறது.
உட்கார்ந்த இடத்தில் நோகாமல் நாலு கோடி சம்பாதிப்பதை விட்டு விட்டு, விழுந்து புரண்டு வெற்றியடையவா விரும்புவார் அவர்? இப்ப சொல்லுங்க….
ஹாரிஸ் சினிமாவுல நடிப்பாரு…?