விபத்தில் காலை இழந்த இளைஞனுக்கு உதவுங்கள்


அன்பிற்கினிய நியூதமிழ்சினிமா.காம் வாசகர்களே, வணக்கம்.

திருச்சியை சேர்ந்த தமிழ்வாணன் கடந்த 25 – 04 2014 அன்று அவரது நண்பருடன் இரு சக்கர வாகனத்தில் பக்கத்துக்கு ஊருக்கு சென்றுவிட்டு வீடு திரும்பும்போது விபத்திற்குள்ளாகிவிட்டார். சாலை வளைவில் எதிரில் வந்த அரசுபேருந்து இவரது பைக்கின் மீது மோதிவிட்டது. பேருந்தின் சக்கரம் வலது காலில் ஏறி கால் முழுவதும் நசுங்கி விட்டது உடனே திருச்சியில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டார். அங்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் வலது காலை அகற்றினால்தான் உயிரை காப்பாற்ற முடியும் என்று கூறிவிட்டார்கள். அதனால் அவரது கால் அகற்றப்பட்டுள்ளது. மருத்துவ செலவான ரூபாய் 3,30050 – யை வறுமையில் உள்ள அவரது பெற்றோர் கடன் வாங்கி செலுத்தியிருக்கிறார்கள்.

இந்த நிலையில் அவருக்கு செயற்கை கால் வைப்பதற்கு ரூபாய் 1,30,000,தேவைபடுகிறது. ஏற்கனவே பெரும் கடனில் சிக்கி தவிக்கும் இவரது பெற்றோர்களால் அந்த சுமையை தாங்க முடியாது என்பதாலும், திருச்சி சென்ஜோசப் கல்லூரியில் M.A.HUMAN RESOURCE MANAGEMENT படித்துள்ள இவருக்கு நீங்கள் இந்த செயற்கை கால் செலவிற்கு உதவினால் முன்பு போல் அவரால் நடக்கவும் வேலைக்கு சென்று அவரையே நம்பி இருக்கும் குடும்பத்தையும் காப்பாற்ற உதவியாக இருக்கும்.

உங்களால் முடிந்த உதவியை கீழ் காணும் இளைஞனுக்கு அளிக்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். உங்கள் உதவியை Otto back helthcare Pvt. Ltd பெயரில் DD எடுத்து அனுப்பலாம். மேலதிக விபரங்களுக்கு புவன்   – 09003047799 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும் 

இப்படிக்கு,

ஆசிரியர்
www.newtamilcinema.in

குறிப்பு- தமிழ்வாணன் மருத்துவ சம்பந்தப்பட்ட தகவல்கள் இணைக்கப்பட்டுள்ளது.


Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
மறுபடியும் மொதல்லேந்தா? சசிகுமாரை அலற விட்ட பாலா!

அடித்து உதைத்து கசக்கி சக்கையாய் பிழிந்தாலும், அதை பாலா செய்கிறார் என்றால் மனப்பூர்வமாக சம்மதிப்பார்கள் அத்தனை ஹீரோக்களும்! ஏனென்றால் பாலா படத்தில் நடிக்கிற எல்லா ஹீரோக்களுக்கும் எதிர்காலம்...

Close