அந்த விஷயத்தில் நயன்தாராவும் ஹன்சிகாவும் ஒண்ணுதான்!

அந்த விஷயத்தில் நயன்தாராவும் ஹன்சிகாவும் ஒண்ணுதான்! சிம்பு விஷயத்தில்தானே என்று நீங்கள் கேட்டால் அதற்கு பெயர் விஷமம்! நாம் சொல்லப்போவதோ விஷமம் இல்லை. விஷயம்! அதுவும் நல்ல விஷயம்.

பொதுவாகவே நடிகைகளுக்கு குழந்தை மனசு என்பதை அவர்கள் ஷுட்டிங்கில் இருக்கும் போது நேரில் பார்த்தவர்கள் அறிவார்கள். ஷாட் பிரேக்கில் அம்மா மடியில் படுத்துக் கொள்வது. அம்மா ஊட்டினால்தான் சாப்பிடுவேன் என்று அடம் பிடிப்பது இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். (அப்படியொரு குழந்தை மனசுக்கார நடிகைகளை பற்றி வரும் கிசுகிசுக்களை கேட்டால் மட்டும் மனம் ஐயோ அப்பா ஆகிவிடுகிறது) இப்படி குழந்தை போலிருக்கிற இவர்கள் மனசு எப்படியிருக்கும்? அதுவும் மிக மிக இளகியதாகதான் இருக்கும். அதற்கு பெரிய உதாரணம் நயன்தாராவும் ஹன்சிகாவும்தான்.

தன்னை சுற்றியிருப்பவர்களுக்கு ஒரு துன்பம் என்றால் துடித்துவிடுவாராம் நயன்தாரா. தன்னாலான உதவிகளை உடனடியாக செய்து கொடுக்காவிட்டால் அவருக்கு உறக்கமே வராது. இப்படி அவர் அள்ளிக் கொடுத்தது நிறைய என்கிறது திரையுலக வட்டாரம். சுனாமியால் தமிழகம் பாதிக்கப்பட்டபோது முதல் முதலாக ஓடிச்சென்று பத்து லட்சத்தை வழங்கியது நயன்தாராதான் என்பதை இப்போது நினைவில் கொள்க.

ஹன்சிகா எப்படி? அந்த விஷயத்தில் அவருக்கும் நயன்தாராவுக்கும் பெயர்தான் வேறு வேறு. குணம் ஒன்றேதான். தன்னை சுற்றியிருப்பவர்களை மட்டுமல்ல, தன்னால் முடிந்த உதவிகளை மற்றவர்களுக்கும் செய்ய வேண்டும் என்று நினைக்கிற கேரக்டர். ஏராளமான அநாதை குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்துவரும் ஹன்சிகா அவர்களுக்கென சொந்தமாக மும்பையில் ஒரு பில்டிங் வாங்கும் முயற்சியிலிருக்கிறாராம். அவர் செய்த லேட்டஸ்ட் உதவி, காஷ்மீரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குளிருக்கு தேவையான ஸ்வெட்டர்களை ஏராளமாக அனுப்பி வைத்ததுதான்!

இனிமே கிசுகிசு எழுதுறவங்க ஜீவகாருண்ய அடிப்படையில் எழுதுங்கப்பா…!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
விஜய் ரசிகர்களுக்கு ஒரு குஷியான செய்தி…! ‘சுற்றி நில்லாதே பகையே, துள்ளி வருகுது கத்தி’

கத்திக்கு விடிவு காலம் பொறந்தாச்சு! ‘தீபாவளி வெளியீடு’ என்று அதிகாரபூர்வமான அறிவிப்பு வந்த பின்பும் படம் வருமா, வராதா? என்கிற பெரும் குழப்பத்தில் சிக்கி தவித்தது கோடம்பாக்கம்....

Close