இங்குதான் #2PointO படத்தின் பிரஸ்மீட் நடைபெற இருக்கிறது!

வருகிற 26 ந் தேதி துபாயில் நடைபெறுகிறது 2.O படத்தின் பாடல் வெளியீட்டு விழா. ஷங்கர், ரஜினி, ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட முக்கிய கலைஞர்கள் கலந்து கொள்ளும் இந்த விழாவின் நிகழ்ச்சி நிரலை வெளியிட்டிருக்கிறது லைக்கா.

அது இதுதான்-

வரும் அக்டோபர் 26ம் தேதி மாலை, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குநர் ஷங்கர், அக்ஷ்ய் குமார், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட முக்கிய 2.0 படக்குழுவினர், அவர்கள் தங்கியுள்ள ஹோட்டலில் இருந்து ஹெலிக்காப்டர் மூலமாக உலகின் ஒரே ஒரு 7நட்சத்திர ஹோட்டலான Burj- Al – Arab செல்கின்றனர். அங்கு உலகளாவிய 2.0 படத்திற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெறவுள்ளது. உலகில் முக்கிய பத்திரிக்கைகளின் நிருபர்கள் கலந்து கொள்கின்றனர்.

இந்நிகழ்வைத் தொடர்ந்து 2.0 படத்தின் இசை வெளியீடு நிகழ்ச்சி 27ம் தேதி நடைபெறுகிறது

இசை வெளியீடு நிகழ்ச்சியின் சிறப்பம்சங்கள்

– 2.0 படத்தின் இசை வெளியீடு burj parkல் நடைபெறுகிறது. முதன் முறையாக இந்த இடத்தில் இப்படிப்பட்ட நிகழ்வு நடத்த துபாய் அரசாங்கம் உத்தரவு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

– இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் 125 சிம்போனி கலைஞர்களுடன் இணைந்து இசை நிகழ்ச்சியை நடத்தவுள்ளார்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், 2.0 படத்திலிருந்து ஒரு பாடலை இந்நிகழ்ச்சியில் நேரலையாக இசையமைக்கவுள்ளார்

பாஸ்கோ நடனக்குழு சூப்பர்ஸ்டார் ரஜினி – இயக்குநர் ஷங்கர் – இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் உருவான பாடல்களுக்கு சிறப்பு நடனவிருந்து அளிக்கவுள்ளனர்.

12000 பேர் இந்நிகழ்ச்சியைப் பார்க்க இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது

துபாயில் உள்ள பெரிய மால்களில் ரூபாய் 2 கோடி செலவில் பிரம்மாண்ட LED போடப்பட்டு இந்நிகழ்ச்சியை நேரலையாகக் காண்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒன்றறை லட்சம் பேர் பார்க்கக்கூடும் என்ற கூறப்படுகிறது.

துபாய் அரசர் இந்தப் பிரம்மாண்ட நிகழ்வில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய குறிப்பு- ஷங்கரின் உதவி இயக்குனர் ஒருவர் தனக்கு சம்பளம் வரவில்லை என்று பேஸ்புக்கில் புலம்பியிருந்தாரல்லவா? அவருக்கு சம்பள பாக்கியை வழங்கிவிட்டதாம் நிர்வாகம். (துபாய்ல ஒட்டகக் கறியை கூட நல்லா அரைச்சு ஜுஸ் போட்டு கூட குடிங்க… நம்ம அசிஸ்டென்ட் டைரக்டர் வீட்ல அடுப்பெரிய அனுமதித்தற்காக(!) நீங்கள்லாம் நல்லாயிருக்கோணும்!)

2 Comments
  1. Santosh says

    tamil nadu people has big dengue issue, kanthu vatty kodumai – still see that 5 year and one year kids suffering in fire..hmm. Shankar, Lyca, Rajini, Rahman all nasamaa pova for wasting huge money for a movie promotion.

  2. Senthil says

    ரஜினி சொன்ன மாறி வாழ்க்கை ஒரு வட்டம். இப்ப சந்தோசமா காசை அநியாய செலவு பண்ணும் ரஜினி லைக்கா Shankar kku ஒரு நாள் துக்கமும் வரும் தானே. கடவுள் எல்லாம் பாலன்ஸ் பன்னிருவார். டெங்குல சாவுறான். விவசாயீ பயிர் வாடி சாவுறான். வறுமைல எத்தனை குழந்தைகள் சாப்பாடு இல்லாம இருக்கு. இவனுங்க ஆடியோ துபாய்ல போஇய் தான் வெளியிடனும்? Instead, audio launch in thanjavur and give same donations to poor farmers etc. கடவுள் இருக்கான் ஷங்கர் ரஜினி லைக்கா.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
தனுஷ் விஜய் சேதுபதிக்குப் பின் நம்ம சந்தீப்தான்! சுசீந்திரன் ஆசை!

சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் நெஞ்சில் துணிவிருந்தால் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது. படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினராக விஷால் கலந்து கொண்டார். நேற்று...

Close