நடிகை- ஹீரோ ரகசிய குடித்தனம்?
அட… நல்லவங்களையெல்லாம் இப்படி போட்டு தாக்குதேப்பா கள்ளக் காதல்? இப்படியொரு வேதனை குரல் ஒலிக்க ஆரம்பித்திருக்கிறது கோடம்பாக்கத்தில். அதுவும் ஒரு ஹீரோவை பற்றி! குடும்பம், குழந்தைகள் என்று செட்டில் ஆனபின்பு தமிழ்சினிமாவில் லேட் பிக்கப் ஆன ஹீரோ இவர். பேட்டிகளில், தனது குடும்பம் மனைவி குழந்தைகள் பற்றி தவிர்க்க முடியாமல் ஒப்புக் கொண்டாலும் மனைவி மக்களை மீடியாவுக்கு முன் அறிமுகப்படுத்தியதில்லை இந்த ஹீரோ.
ஒரு ஹீரோ வேகமாக வளர்ந்து வருகிற நேரத்தில் இமேஜ் பார்ப்பதில் தவறில்லை அல்லவா? அதனால்தான் தனது குடும்பம் பற்றி அதிகம் பேசுவதில்லை என்று மற்றவர்கள் நம்பிக் கொண்டிருக்க, அவரோ அந்த குடும்பத்தை விட்டு விட்டு தன்னுடன் இரண்டு படங்களில் நடித்த நடிகை ஒருவருடன் செட்டில் ஆகிவிட்டாராம். ஒருவேளை அவரை காதலிக்க ஆரம்பித்த பின்பு ஐஸ்வர்யம் கொட்ட ஆரம்பித்ததோ, அல்லது ஐஸ்வர்யம் கொட்டுவதால் நடிகை இவரை காதலிக்க ஆரம்பித்தாரோ? நமக்கு தெரியாது. ஆனால் இவ்விருவருக்கும் காதல் என்றும், தனது படங்களில் அந்த நடிகையை ஜோடியாக்க சொல்லி ஹீரோ அடம் பிடித்ததையும் மோப்பம் பிடித்து ஏப்பம் விட்டது மீடியா.
அந்த நேரங்களில் எல்லாம், ‘அவர் என்னோட சக நடிகை. அவ்வளவுதான். நீங்க நினைக்கிற மாதிரி எங்களுக்குள்ளே எதுவும் இல்ல ’ என்றார் ஹீரோ. அப்படியிருந்தும் கிசுகிசுக்கள் துரத்தியதால் இனி எந்த படங்களிலும் சேர்ந்து நடிப்பதில்லை என்று முடிவெடுத்தார்கள் இருவரும்.
தற்போது ஒரு அதிர்ச்சி தகவல். மேற்படி ஹீரோ அந்த நடிகையை தனியே வீடு எடுத்து தங்க வைத்திருப்பதுடன், தானும் அவருடனேயே தங்க ஆரம்பித்திருக்கிறாராம். ரஜினி- கமல், அஜீத்- விஜய்- சிவகார்த்தியேன்- இவர் என்று அடுத்த தலைமுறை ஹீரோவாக இவரைதான் நினைத்துக் கொண்டிருக்கிறது மீடியா.
இந்த நேரத்தில்தான் இப்படியொரு ராங்-ரூட்! பண்ணையார் வேட்டியில ஜரிகை இருக்கலாம். ஆனால் அதே ஜரிகை அவர் முகத்துல ஒட்டியிருந்தா அவர் காமெடியன் ஆக மாட்டாரோ? சுதாரிச்சுங்க ஹீரோ.