40 கோடி கடனை ஒரே நேரத்தில் செட்டில் பண்ணிய ஹீரோ! மூணு நாள் கழிச்சுதான் செல்லாம போச்சு

“அம்பானிக்கும் அதானிக்கும் முன் கூட்டியே தெரிஞ்சுதான் எல்லா கருப்பு பணத்தையும் வெள்ளையாக்கிட்டாங்க” என்று மிடில் வட்டி சேட்டுகளும், மேக்சிமம் வட்டி மார்வாடிகளும் வட நாட்டில் கூச்சல் போட ஆரம்பித்துவிட்டார்கள். பாராளுமன்றம் வரைக்கும் இக் குரல் ஒலிக்கும் போலிருக்கிறது. ஆனால் “தமிழ்நாட்லேயும் கொஞ்ச பேருக்கு தெரிஞ்சுருக்கும். இல்லேன்னா சொல்லி வச்ச மாதிரி இப்படி நடக்குமா?” என்று வாயை பிளக்கிறது இன்டஸ்ட்ரியின் இருட்டு மூலை!

ஒருநாள் பின்னிரவில், ‘‘1000 ரூபாய் 500 ரூபாய் தாள்கள் இன்றிரவிலிருந்து செல்லாது” என்று பிரதமர் மோடி தொலைக்காட்சியில் தோன்றி அறிவித்தார் அல்லவா? அந்த நிமிஷத்திலிருந்தே நாடு குய்யோ முய்யோ என்றாகி விட்டது. ஆனால் அதே நேரம், தனது பொல்லாத மீசையை தடவிக் கொண்டே மந்தகாச சிரிப்பு சிரித்திருப்பார் அந்த ஹீரோ. இப்படியெல்லாம் நடக்கும் என்பதை முன் கூட்டியே அறிந்ததை போல, அறிவிப்பு வரும் சில தினங்களுக்கு முன்பு அவசரம் அவசரமாக சுமார் 40 கோடி ரூபாயை சில கார்களில் ஏற்றிக் கொண்டு மாவட்டம் தாண்டி கொண்டு போய் கொடுத்துவிட்டு வந்தாராம் அந்த பைனான்ஸ் பிரமுகரிடம்.

“நமக்கும் உங்களுக்கும் எந்த கடன் பஞ்சாயத்தும் இல்லேண்ணே. இனிமே வாங்குனாதான்” என்று ஒரேயடியாக முடித்துவிட்டு வந்தவருக்குதான் மூன்று நாள் கழித்து இந்த மந்தகாச சிரிப்பு. இவர் கடனை அடைத்துவிட்டு வந்தாரல்லவா? கொடுத்த கடனை திருப்பி வாங்கிய அந்த பைனான்சியருக்கு 500 கோடியாவது அடிபடும் என்கிறார்கள்.

பொதுவாக சினிமாவில் வட்டிக்கு வாங்கி படம் எடுப்பவர்கள், பைனான்சியருக்கும் தனக்குமான உறவை கடனை முழுசும் அடைக்காமல் வைத்திருந்து நீட்டிப்பார்கள். இவரும் சில வருடங்களாக அப்படிதான் நடந்து வந்தாராம். ஆனால் திடீரென புல் செட்டில்மென்ட் என்று அவ்வளவு பெரும் தொகையை அவர் கொடுத்தது ஏன்? என்ற கேள்வி இப்போது பிரமுகருக்கே வந்திருக்கிறதாம்.

அங்கங்க ஆள் இருந்தா, ஆகாசத்தை போர்வையாக்கி அணுகுண்டை டிபன் ஆக்கிக்கலாம் போல…! பெரிய இடத்துல வாழ்க்கைப் பட்டால், பெரிய விஷயம் கூட சின்னதா முடிஞ்சுரும்!

 

1 Comment
  1. nospam says

    who is the hero and the financier? any idea?

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
Rajnikanth Handles Dhanush’s Movies After kodi.

https://youtu.be/G9xsXgXTDvo  

Close