வௌக்குமாறு பிஞ்சுரும்… சுற்றி வந்த ஹீரோக்களை சொல்லியடித்த நடிகை!

‘மவனே… கையில கெட்ச்ச? நாஸ்திதான்!’ புரிஞ்சுருக்குமே? இது சென்னை பாஷைதான். ‘வந்தா மல’ என்றொரு படம். இகோர் இயக்கியிருக்கிறார். கலாபக் காதலன், திக் திக் திக், தேன்கூடு என்று சில படங்களை எடுத்த இகோர், ஒரு பிரபல இயக்குனர் கம் நடிகரின் ரகசிய மருமகன். (அதுக்கு மேல சொல்ல மாட்டோமே?) இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில்தான் அந்த சுவாரஸ்யம்.

திரையில் காட்டப்பட்ட ட்ரெய்லரில், பிரியங்கா தன்னுடன் நடித்த நான்கு இளைஞர்களுக்கும் வௌக்குமாறு பிய்ந்து போகிற அளவுக்கு வெளுர் கொடுத்துக் கொண்டிருந்தார். அந்த காட்சியை எப்படி எடுத்தார்களோ, எத்தனை ரீ டேக் போனார்களோ? அடி உதை வாங்கிய அந்த இளம் ஹீரோக்களான தமிழ், பிரசாத், ஹிட்லர், உதயராஜ் ஆகிய நால்வரும், பிரியங்கா உட்கார்ந்திருந்த அந்த மேடையில் கூட சற்றே ஜர்க் அடித்த கோலத்தில்தான் அமர்ந்திருந்தார்கள். முதல்ல அடிக்கறதுக்கு தயங்குவாங்கன்னுதான் நாங்க நினைச்சோம். ஆனால் பின்னி எடுத்துட்டாங்க என்று தனித்தனியாக புலம்பியது தனி ஷாக்.

ட்ரெய்லர் மற்றும் பாடல்களை பார்த்த விதத்தில் ஒன்று புரிந்தது. இந்த கதை சென்னையில் செயின் அறுக்கும் இளைஞர்களை பற்றிய கதை. ஸ்லம் பின்னணியில்தான் இந்த படத்தை எடுக்க முடியும். சென்னையிலிருக்கும் குப்பங்களையெல்லாம் நோட்டம் விட்ட இகோருக்கு சேத்துப்பட்டுதான் பொறுத்தமாக அமைந்ததாம். இவர் போனாலும் போனார். முழு படத்தையும் எங்க ஊர்லேயே கூட எடூங்க. நாங்க இருக்கோம் என்று இவர்களை சூழ்ந்து கொண்டார்களாம். பல நாட்கள் அங்கேயே இருந்து இந்த படத்தை உருவாக்கியிருக்கிறார் இகோர்.

ஒரு படத்தின் ட்ரெய்லரும், பாடல்களும், அட… இந்த படத்தில் விஷயம் இருக்குப்பா என்று எண்ண வைத்தால், அந்த படம் ரிலீஸ் ஆன நாளிலிருந்தே ஓஹோ என்று பிய்ச்சுக்கும்! ‘வந்தா மல’ படத்தின் படைப்பிலும் அந்த விசேஷம் இருந்தது. அதிலும் புதுமுக இசையமைப்பாளரான சாம்.டி.ராஜ் இந்த வருடத்தின் ஹிட் பாடல்களுக்கு உத்தரவாதமே கொடுத்திருக்கிறார். இகோரே ஒரு பாடலை பாடியும் இருக்கிறார்.

ஒரு கானா பாடலில் அண்ணாவையும், அம்பேத்காரையும், எம்ஜிஆரையும் கூட இழுத்திருக்கிறார்கள். தியேட்டரில் ஒரே கைத்தட்டல்! (நல்லவேளையாக இதை கானா பாலா பாடவில்லை என்பதுதான் விசேஷத்திலும் விசேஷம்)

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
“Eli” Official Trailer

https://www.youtube.com/watch?v=z2sLYghEvSE&feature=youtu.be

Close