ஒரு பிரச்சனையே முடியல… அதுக்குள்ள இன்னொன்று?
தனது ஆபாசப்படம் இணையதளத்தில் வெளியான நிமிடத்திலிருந்தே செல்போனை சுவிட்ச் ஆஃப் பண்ணிவிட்டு அமைதியாகிவிட்டார் அந்த நடிகை. அவர் மீது அன்பு கொண்ட பல இயக்குனர்களும், நடிகர்களும் சம்பந்தப்பட்ட நடிகைக்கு போன் அடித்துக் கொண்டேயிருக்கிறார்களாம். எடுத்தால்தானே ஏதாவது யுக்தியை சொல்லி இந்த கெட்ட இமேஜிலிருந்து அவரை விடுவிக்க முடியும்? ஆனால் அதற்கெல்லாம் சந்தர்ப்பம் கொடுக்காமலே ஒளிந்துவிட்டார் நடிகை.
அவர் பிரச்சனை ஓய்வதற்குள் அடுத்த பிரச்சனை. ஆந்திரா, கர்நாடகா, தமிழகம் என்று மும்முனை ரசிகர்களையும் மொழ மொழ ஆக்கிவிட்டது ஒரு வீடியோ காட்சி. இணைய தளங்களில் சர்வ சாதாரணமாக உலவி வருவதாக சொல்லப்படும் அதில் நடிகை தமன்னா மசாஜ் செய்து கொள்வது போல காட்சி இடம் பெற்றுள்ளதாம். ‘தெரியுமா சேதி… அப்படியே மெர்குரி பல்பு மேலே மழை பேஞ்சா மாதிரி என்னமா இருக்கா..(ரு)’ என்று சில ரசிகர்கள் ஜொள் விடுவதை நம்பி இன்டர்நெட்டை கவுத்துப்போட்டு குடைந்து வருகிறது இளைஞர் கூட்டம். நெட் சென்ட்டர்களில் கிசுகிசு குரலில் ‘அது வருமா?’ என்றபடி நெட்டை துழாவுகிறார்களாம் அந்த அதி தீவிர ரசிகர்கள். இருந்தாலும் அப்படியொரு ஸ்டில்லோ வீடியோவோ எவர் கண்ணுக்கும் தென்படவில்லை.
விஷயம் தமன்னா வரைக்கும் போய், தன் ட்வீட்டர் பக்கத்தில் ‘அது நானில்லைங்க, வேறு யாரோ தெரியல…’ என்று ஸ்டேட்டஸ் போடுகிற அளவுக்கு நிலைமை சீரியஸ். வாழைப்பழத் தோல் வழுக்கி வாழை மரமே விழுந்த கதையாக, நம்ம ஊருக்கு பஞ்சம் பொழைக்க வந்த நடிகையை இப்படியாப்பா வெறுப்பேத்துவீங்க… உங்க வீட்டுல ரசம் வைக்க!