ரஜினி அரசியலுக்கு வந்தால் என்ன தப்பு? கூவுகிற போராளிஸ்… கொஞ்சம் பொத்துறீங்களா?

“நான் அரசியலுக்கு வந்தால்…”

அவர் பேசியது இந்த மூணே வார்த்தைகள்தான். ரஜினியால் கிடுகிடுத்துப் போய்விட்டது நாடு! தொலைக்காட்சிகள் அத்தனையிலும் இது குறித்த விவாதங்கள்தான். செய்தித்தாள்களில் எல்லா பக்கங்களிலும் இது குறித்த கருத்துக்கள்தான். சோஷியல் மீடியா பக்கம் போனால், “கன்னடனுக்கு இங்க என்ன வேலை? ஓடு பெங்களூருக்கு” என்று வெற்றிலையை மென்று ரத்தமாக துப்புகிறது ஒரு கூட்டம்!

“நடிகனுக்கு எதுக்கு இந்த ஆசை?” என்று இன்னொரு கூட்டம் வாயை வில் போல திறந்து, விசுக் விசுக்கென்று விஷ அம்புகளை வீசிக் கொண்டிருக்கிறது.

“ரஜினி இந்த தமிழ்நாட்டுக்கு ஏதாவது நல்லது செய்திருக்கிறாரா? அவருக்கு எதற்கு சி.எம் ஆசை?” என்று இன்னொரு கூட்டம் ஒவ்வொரு பற்களையும் கோடரியாக்கி கூர் கூராக அறுத்துத் தள்ளுகிறது.

பிரபல எழுத்தாளர் பாமரன் கூட, “ரஜினி சி.எம் ஆகிவிட்டால் கர்நாடக அணையில் குண்டு வச்சு தமிழ்நாட்டுக்கு தண்ணி திறந்து விடுவாரா? அல்லது இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் மீனவர்களுக்கு ஆதரவாக படகில் போய் அந்நாட்டு ஜெயிலை உடைத்து மீனவர்களை மீட்பாரா?” என்று கேள்வி கேட்கிறார்.

இப்படி படித்தவன்… படிக்காதவன்… அறிவாளி… எழுத்தாளர்… கம்னாட்டி… முட்டாப்பய… என்று எல்லாரும் கூடி கூடி ரஜினிக்கு எதிராக பேசுவதை கேட்டால் அடிவயிற்றிலிருந்து எழுகிற சிரிப்பை அடக்கவே முடியவில்லை.

ஐயா பெரிய மனுசனுங்களா? ரஜினி வந்தால் தமிழ்நாட்டு அரசியலே உருப்படாமல் போய் விடும் என்று உறுமி வரும் கருமி நெஞ்சங்களே… நீங்கள் என்ன காமராஜரும் கக்கனும் ஆள்கிற நாட்டிலா இருக்கிறீர்கள்? பொறுக்கிகளும் கொள்ளைக்காரர்களும் நம்மை ஆளும் நாட்டில், இன்னொரு நபர் வந்துதான் தொலைக்கட்டுமே? அவரும் பொறுக்கியா, புத்தனா என்பதை காலம் தீர்மானிக்கட்டுமே?

சரி… உங்கள் ஒவ்வொரு கேள்விக்கும் நான் அடுக்கடுக்காக பதில் சொல்கிறேன்.

ரஜினி நாட்டுக்காக போராடி ஜெயிலுக்கு போயிருக்கிறாரா? அவருக்கு ஏன் முதலமைச்சர் ஆசை? இதுதானே உங்கள் முதல் கேள்வி. அட நியாயவானுங்களே… தினந்தோறும் பொதுப் பிரச்சனைக்காக ரயில் மறியலும் பஸ் மறியலும் செய்து, உண்ணாவிரதம் இருந்து போலீசிடம் லத்தியடி வாங்குவது DYFI என்ற அமைப்பின் இளைஞர் கூட்டம்தான். நீங்கள் நியாயவானாக இருந்திருந்தால், அவர்களில் ஒருவனையாவது எம்.எல்.ஏ வாக்கி அழகு பார்த்திருக்க வேண்டியதுதானே? அட… அது கூட வேண்டாம். உங்கள் ரேஷன் கார்டை காட்டி ஒரு முறையாவது அவனை ஜாமீன் எடுத்திருக்கிறீர்களா?

இப்படி நமக்காக அடி வாங்குகிறவனுக்கே ஒரு மண்ணும் உருட்டி வைக்காத நீங்கள், எந்த நம்பிக்கையலடா தோள் தட்டுகிறீர்கள்?

சரி… DYFI வேண்டாம். இந்த வைகோ? எவ்வளவு கேவலப்படுத்தினாலும், நாலாம் நாள் தோளை சிலுப்பிக் கொண்டு துண்டை இழுத்துக் கொண்டு பொதுப்பிரச்சனைக்காக வெயிலில் கிடந்து போராடுகிறாரே? அவரை மனுஷனாகவாவது மதிக்கிறீர்களா? அறம் ஒன்றே அற்புதம் என்று பொதுவாழ்வில் பொங்கி வருகிற தமிழருவி மணியன் ஒரு கட்சி ஆரம்பித்தாரே… அதன் பெயர் என்ன என்றாவது உங்களுக்கெல்லாம் தெரியுமா?

சரி… உங்கள் ரெண்டாவது கேள்விக்கு வருகிறேன்.

ரஜினி ஒரு கன்னடன். தமிழ்நாட்டை ஒரு தமிழன்தான் ஆள வேண்டும். இதுதானே உங்கள் முழக்கம்?

ஒட்டுமொத்த இந்தியாவுக்கு ஒரு தமிழன் ஜனாதிபதி ஆகும்போது தமிழன் என்று சந்தோஷப்படுகிறாய். பல ஆயிரம் மைல்களை தாண்டி அமெரிக்காவிலிருக்கும் புளோரிடா மாநிலத்தில் ஒரு தமிழன் கவர்னர் ஆகிவிட்டால், தமிழன்டா என்று பெருமைப்படுகிறாய். இப்படி தமிழனுக்கு இன்னொரு இடத்தில் பெருமை கிடைக்கும் போது வாயெல்லாம் பல் ஆகும் நீ… இன்னொருவனுக்கு இங்கே இடம் கேட்டால், “நான் தமிழன்டா. ஒருத்தனுக்கும் இடம் தர மாட்டேன்” என்று மார் தட்டுகிறாய். சுருக்கமாக சொன்னால், உன் தாலியை அறுக்கறதா இருந்தாலும் அவன் தமிழனா இருக்கணும். உன் குடியை கெடுப்பவனா இருந்தாலும் அவன் தமிழனா இருக்கணும். அப்படிதானே? (மேற்படி தமிழன் இந்த ரெண்டு வேலையையும் தானே கடந்த பல ஆண்டுகளாக இங்கே செய்து கொண்டிருக்கிறான்?)

சரி… மிஸ்டர் பொங்குமாங்கடல்களின் மூன்றாவது கேள்வி என்ன? “ரஜினி இங்க சம்பாதிச்சு கர்நாடகாவுல சொத்துக்களா வாங்கிப் போட்ருக்காரு. தமிழ்நாட்லயா வாங்கிப் போட்டாரு?”

அடேய் பக்கிகளா? நெஞ்சில் கைவைத்து சொல்லுங்கள். நீங்கள் கொண்டாடும் தமிழின போராளிகளுக்கு சுவிஸ் வங்கியில் கணக்கு இல்லையா? அதில் கோடி கோடியாக பணம் இல்லையா? அதே தமிழன போராளிகள் தமிழ்நாட்டை தவிர வேறு எந்த மாநிலத்திலேயும் சொத்துக்களை குவித்து வைத்திருக்கவில்லையா? ஊழலால் அடித்த பணத்தை இப்படி உலகம் முழுக்க கொட்டி வைத்திருக்கிற அவர்களுக்கு முன், சொந்தமாக உழைத்து சம்பாதித்த பணத்தை அவர் பிறந்த மாநிலமான கர்நாடகத்தில் சேமித்து வைத்திருப்பது தேசக் குற்றமா?

“எந்த பொதுப் பிரச்சனைக்காகவாவது ரஜினி குரல் கொடுத்திருக்கிறாரா?” இது உங்களின் நான்காவது கேள்வி.

சரியான கேள்வி. கேட்க வேண்டிய கேள்வி. பொதுப்பிரச்சனைக்காக குரல் கொடுத்த சிலரது பிளாஷ்பேக்கை ஆக்ஷன் ரீப்ளே பண்ணுவோமா?

வால்மார்ட், ரிலையன்ஸ் போன்ற பன்நாட்டு வணிகத்தை இங்கே அனுமதிக்க மாட்டோம் என்று மருத்துவர் பேமிலி குரல் கொடுத்ததே…? அதன் ரிசல்ட் என்ன என்று கொஞ்சம் சொல்றீங்களா போராளீஸ்?

ஒருபுறம் மதுபான ஆலையை சொந்தமாக துவங்கி டன் டன்னாக பீர் பாட்டில்களாகவும் பிராந்தி பாட்டில்களாகவும் கடைக்கு சப்ளை செய்து கொண்டே, இன்னொரு பக்கம் மதுவுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் கூச்சலிடும் ‘முன்னாள்’களின் முனகல்தான் பொதுப்பிரச்சனைக்கு குரல் கொடுக்கும் ஸ்டைல் என்றால், அது ரஜினியிடம் இல்லைதான்!

இப்படி நீங்கள் எழுப்பும் எல்லாவற்றுக்கும் இங்கு நாக்கை பிடுங்கிக் கொள்கிற அளவுக்கு பதில் உண்டு. ஆனால் என்னையும் ரஜினி ரசிகன் என்று முத்திரை குத்திவிடுவீர்களோ என்கிற அச்சத்தால் நிறுத்திக் கொள்கிறேன்.

ரஜினியை விமர்சிக்க இதைவிட ஆயிரம் விஷயங்கள் என்னிடம் உண்டு. நான் பலமுறை ரஜினியை கடுமையாக விமர்சித்திருக்கிறேன். ஆனால் அவர் அரசியலுக்கு வரக்கூடாது என்கிற உரிமை உனக்கும் எனக்கும் மட்டுமல்ல…. அவருக்காக விசிலடிக்கும் கூட்டத்திற்கு கூட இல்லை என்பதுதான் இந்திய ஜனநாயக பெருங்குடி நாட்டின் நிதர்சனம்.

ரஜினி, மோடிக்காக கூவுகிறாரோ? கோடிக்காக கூவுகிறாரோ? முதலில் வரட்டும்…. வந்து நிற்கட்டும். நல்லது செய்தால் நல்லது! இல்லையென்றால் நாட்டுமக்களின் தாலியறுத்தவர்கள் லிஸ்ட்டில் இந்தாளையும் வைத்து கும்பிட்டுவிட்டு போகிறோம்.

பிக்காஸ்… எங்களுக்கு முதுகுத்தோல் கொஞ்சம் ஸ்டிராங் மச்சி!

-ஆர்.எஸ்.அந்தணன்

https://youtu.be/rl1IU0xAEbI

9 Comments
  1. கிரி says

    செம 🙂

  2. Chellpa says

    தமிழக நலன் காக்க சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் அரசியல் களம் காண வேண்டும்.

  3. Siv says

    Good one!

  4. பிசாசு குட்டி says

    கட்டுரை படு கேவலம்..
    தமிழனுக்கு எவனாவது ஒருத்தன் தலைமை எப்போதும் தேவை அடிமைகளாக சேவை செய்ய
    சினிமா கவர்ச்சிக்கு அடிமைகளாகவே பழக்கப்பட்டுவிட்டோம் என்ன செய்ய..

  5. Karthick says

    Whoever wrote this article must be a anti Tamil and born to kannadiga.

  6. ரவி says

    எந்த கேவலம் கெட்ட நாய்டா இத எழுதனான். போய் அவனுக்கு மண்டி போடு போ. எங்கள்க்கு ஆலோசனை சொல்ல தேவை இல்ல

  7. NARAYANAN says

    அரசியல் செய்ய, பேச ஒரு தகுதி புன்னாக்கு வேணாம் என்கிறார் கட்டுரையாளர். சுவிஸ்சில் பணம் வைத்திறுப்பவன் தமிழனை ஆள நினப்பதில்லை. அஸ்ரம் பள்ளி நடத்தி கொள்ளை அடிக்கும் ரஜினி குடும்பம் ஆட்சி கிடைத்தால் நாட்டை கொள்ளை அடிக்காதா. தமிழர் நலனுக்கு ஒரு தும்மல்கூட போடாத ரஜினிக்கு அந்தணன் பொங்குவதுவதை பார்த்தால் இவர் சொரனை கெட்ட தமிழனாக இருக்க .வேண்டும். அல்லது தமிழனாக இருக்க முடியாது.

    1. Rajii says

      டம்ளர் கட்சி தலைக்கு சுசிஸ் பாங்கில் பினாமி பெயரில் பணம் இல்லை என்று சொல்ல சொல்லுங்கோ ஒருக்கா
      சென்னையில் வாடகை வீட்டிற்கே வழி இல்லாத தலைக்கு ஊட்டியில் பதினைந்து ஏக்கர் நிலம் எப்படி வந்தது.
      இவர்களே ஆள துடிக்கும் போது ரஜினி ஒன்னும் மோசம் இல்லை.
      வரட்டுமே , வந்தாலும் வெல்ல முடியாது அது வேற கதை

  8. Rajii says

    தெளிவான விளக்கம் சார் . குறிப்பா இந்த டம்ளர் ஆதரவாளர்களுக்கு கொஞ்சமாவது தெளிவு வரட்டும்

Reply To Rajii
Cancel Reply

Your email address will not be published.

Read previous post:
தமிழ் திரைப்பட வர்த்தக சபை… மீண்டும் செயல்பட ஆரம்பித்தது!

Close